நடப்பு ஆண்டில் நிதித் துறையில் மறக்க முடியாத பல சம்பவங்களை உருவாக்கி விட்டது எனலாம். பலருக்கும் இந்த 2022 என்பது மறக்க முடியாத ஒரு சம்பவமாக இருக்கலாம்.
குறிப்பாக ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்து போயுள்ளன. நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பற்பல நிறுவனங்கள் கைமாறியுள்ளன. பல நிறுவனங்களும் மந்த நிலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டன.
முதலிடத்தில் யார் தெரியுமா?
இதனால் பல கசப்பான சம்பவங்களும் அரங்கேறின. இப்படி நடப்பு ஆண்டில் சர்ச்சைக்குரிய தலைமை செயல் அதிகாரிகள் யார்? அவர்கள் எந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி, என்ன பிரச்சனை? வாருங்கள் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தான்.
ட்விட்டரில் அடுத்தடுத்த சர்ச்சைகள்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து அறிவித்த எலான், பின்னர் பின் வாங்கிய நிலையில், ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு பல கட்ட பிரச்சனைக்கு பிறகு ஒரு வழியாக ட்விட்டர் நிறுவனத்தினை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அங்கு பணி நீக்கம் தொடங்கி ப்ளூ டிக் கட்டணம் வரையில் பல சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக எலான் மஸ்கின் மூலம் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடுமையான மெயில் ஒன்று ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் ஊழியர்கள் கட்டாயம் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கு விருப்பம் இல்லாதவர்கள் வேலையை விட்டு செல்லலாம் என்றும் அறிவித்திருந்தார்.
சாம் பேங்க்மேன் ப்ரைட்
நடப்பு ஆண்டில் மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று. உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான FTX திவாலானது தான். இதன் தலைமை செயல் அதிகாரியான சாம் பேங்க்மேன் ப்ரைட் சொத்து மதிப்பு பில்லியனர் பட்டியலில் இருந்து, திடீரென மிக மோசமான நிலையை எட்டினார். கோடிஸ்வரரான ப்ரைட் ஒரே நாளில் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டார்.
எப் டி எக்ஸ்- ல் என்ன சர்ச்சை?
காயின் டெக்ஸ் நிறுவனம் எப் டி எக்ஸ் குறித்த ஆய்வறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் அலமேதா ஆய்வு நிறுவனம் மறைமுகமாக எப்டிஎக்ஸ் நிறுவனத்தின், எப்டிடி கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி வெளியானதையடுத்து எப்டிஎக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அந்நிறுவனத்திலிருந்து தங்கள் முதலீட்டை திரும்பப் பெறத் தொடங்கினர். இதையெடுத்து தான் எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சரியத் தொடங்கியது.
எலிசபெத் ஹோல்ம்ஸ்
அமெரிக்காவின் பயோடெக் நிறுவன அதிபரான எலிசபெத் ஹோல்ம்ஸ்-க்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு சில துளி அளவுகளில் ரத்தத்தை வைத்தால், அவரவர் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தயாரிக்கப்பட்ட மெஷின் மூலம், பல்வேறு சோதனை முடிவுகளை வெளியிடும் என்று பொய்யாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதனை நம்பி ஏராளமான மக்கள் அதனை வாங்கி குவித்தனர். ஆனால் எலிசபெத் கூறியபடி அந்த மெஷின் வேலை செய்யவில்லை. இதனால் பெரும் மோசடி வழக்கில் எலிசபெத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் எலிசபெத் கர்ப்பமாக இருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சாந்தணு தேஷ் பாண்டே
பாம்பே சேவிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாந்தணு தேஷ் பாண்டே, சமீபத்தில் புதியதாக பணிக்கு சேரும் ஊழியர்கள் கால நேரம் பாராமல் தினசரி 18 மணி நேரம் பணி புரிய வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இன்றைய நாளில் 8 மணி நேர வேலைக்கு 10 மணி நேரம் 12 மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சாந்தணுவின் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சாந்தணுவின் சர்ச்சை பதிவு
இது குறித்து சாந்தணு அவரின் லிங்கிட் இன் பக்கத்தில் புதியதாக வேலைக்கு சேருகின்றீர் எனில், உங்களை நீங்களே செய்யும் வேலையில் அர்ப்பணியுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உடலையும் சீராக வைத்துக் கொள்ளுங்கள், அதே நேரம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வரையில் பணி புரியுங்கள். இதனை 4 - 5 ஆண்டுகள் வரையில் தொடருங்கள். வேலை செய்பவர்களுக்கு குடும்பம் உள்ளிட்ட பல அவசியமான தேவைகளும் இருக்கின்றன. நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் தங்கள் வேலையை தொடர்வது மிக அவசியம். அதற்காக ஆர்பாட்டம் செய்யாதீர்கள். ஓயாமல் வேலை செய்யுங்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். எனினும் இது பெரும் விவாதமான நிலையில் அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
அஷ்னீர் குரோவர்
பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஷ்னீர் குரோவர் மீது, அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர்கள் குடும்பமான இணைந்து பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டது அம்பலமானது.
குறிப்பாக அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் பாரத் பே நிறுவனத்தின் நிதியினை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் தணிக்கையில் தெரிய வந்தது. அதனை உயர்தர அழகு பராமரிப்பு, விலை உயர்ந்த மின்னனு சாதனங்கள், வெளி நாடு சுற்றுப் பயணத்திற்காக நிறுவனத்தின் பணத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. மேலும் சொத்துகள் வாங்கியதாகவும் சர்ச்சை எழுந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications