Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

வழக்கத்துக்கு மாறாக 2023இல் கிளாசிக் பேஷன் டிரெண்டின் எழுச்சியைப் பார்க்க முடிந்தது. ஃப்ரெஷ் ஸ்டைல் கார்மெண்ட்ஸ், ஆக்சஸரிகளுடன் இந்த கிளாசிக் பேஷன் அம்சங்களும் கலந்து கட்டி மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. எனவே 2023இல் கலப்படமான பேஷன் டிரெண்டை மக்கள் அனுபவித்தனர் எனலாம்.

இந்த ஆண்டு முடியும் தருவாயில் கடைத்தெருக்களில் உலாவினால் என்ன மாதிரியான பேஷன் ஐட்டங்கள் கண்ணைக் கவருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஐட்டங்களுக்கான டிமாண்டு ஒருவேளை
இந்த ஆண்டு முடிந்த பின்னரும் கூட தொடர வாய்ப்புள்ளது.

Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

ஈஷா அம்பானி : இந்த ஆண்டு நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சியில் ஈஷா அம்பானி அணிந்து வந்திருந்த ஆடை அங்கு வந்திருந்தவர்களையெல்லாம் பார்த்தவுடனேயே கிறங்கடித்து விட்டது. அந்த நிகழ்ச்சியில் அவான்ட்-கார்டே( avant-garde) கோல்டன் கலர் டிரஸ்ஸை அணிந்திருந்தார். சரம்சரமாக புஸ்ஸென்று ஃப்ரிஞ்டு ஹெம் அமைப்புடன் தேவதையாகக் காட்சியளித்தார். இந்த செலக்ஷன் அவருக்கு பேஷன் மீது உள்ள ஆர்வத்தைக் காட்டியது. இந்தாண்டு பேஷன் டிரெண்டில் ஈஷா அம்பானிக்குத்தான் முதலிடம்.

அவான்ட்-கார்டே பிராண்டு பொதுவாகவே வழக்கத்தில் இருப்பது போன்று இல்லாமல் தனித்துவமான டிசைன்களில் ஆடைகளை தயாரிப்பதற்குப் பெயர் போனது. அவையெல்லாமே டிசைனர் டிரஸ்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி மட்டுமே பிரத்யேகமாகத் தயாரித்துத் தரப்படும். இதனால் அவான்ட்-கார்டே தயாரிப்புகள் எல்லாமே பார்த்தவுடன் அதிரடியை கிளப்பும்.

ஆலியா பட் : ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி என்ற படத்தின் புரோமோஷனுக்காக ஆலியா பட் ஆம்பிரே சாரியை அணிந்து கலக்கினார். லைட் புளூ, பீச், மாவே ஹியூஸ் நிறங்கள் கலந்த இந்த சாரி பார்க்க வேற லெவலில் இருந்தது. சாரியின் பார்டரில் அமைக்கப்பட்டிருந்த லேஸ் கூடுதல் கவர்ச்சியை தந்தது.

Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

இந்த சாரியுடனான ஆலியா பட்டின் போட்டோ வெளியானவுடனேயே சோஷியல் மீடியாவில் அதகளம் செய்துவிட்டது. சாரிக்குப் பொருத்தமாக சில்வர் ஜிமிக்கியை அணிந்திருந்ததைப் பார்த்து ஜொள்ளு விடாதவர்கள் பாக்கியில்லை. சிம்ப்ளி ஸ்டன்னிங்! எனவே இந்தாண்டின் பேஷன் டிரெண்டில் 2ஆவது இடம் ஆலியா பட்டுக்கு.

தீபிகா படுகோன் : இந்த ஆண்டில் தீபிகா படுகோன் போட்டிருந்த டான்-கலர்டு(செம்பழுப்பு நிறம்) அவுட்ஃபிட் டிரெண்டில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அவுட்ஃபிட்டில் தீபிகா படுகோன் ஸ்போர்ட்டி ஷர்ட்டும், கீழே கிட்டத்தட்ட பெல்பாட்டம் ஸ்டைல் பேண்ட்டும் காணப்பட்டார். அவரது ஜாக்கெட்டில் பக்கவாட்டில் வெண்மை நிறத்தில் ஸ்ட்ரிப்கள் இருந்தன.

Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

முன்புறம் அகலமான காலர் கொண்ட நெக்லைனும், ஜிப் குளோஷர்களும், முழுக்கை ஸ்லீவ்களும் அமைந்திருந்தது. அவரது பேண்ட் ஹை-ரைஸ் வெயிஸ்ட், சைடு பாக்கெட்டுகள், கச்சிதமான அகலத்தில் இறக்கமாகவும் இருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கத்ரீனா கைஃப் : ரெட் ஸீ இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் பங்கேற்ற சினிமா நடிகைகளில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்து ஜிலுஜிலு ஷோ-பீஸாக கத்ரீனா ஜொலித்தார். காரணம் அவர் அணிந்திருந்த பிளாக் வாலன்டினோ கவுன். அதை பார்த்தவர்களின் இதயநாடி ஒரு செகண்டுக்கு நின்றே விட்டது என்றால், 'ஓவராப் புகழாதீங்க' என்று சொல்லக் கூடாது. பார்த்தவர்களுக்குத்தான் இது புரியும்.

Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

கத்ரீனாவுக்காகவே டிசைன் செய்யப்பட்ட இந்த ஆடையில் அமைக்கப்பட்ட எடுப்பான நெக்லைன், நேர்த்தியான ஸ்லீவ்கள், எலிகண்ட் காஸ்கேடிங் ஸ்கர்ட் அவரது கவர்ச்சியான வசீகரத்தை மேலும் அதிகரித்தது. கூந்தலை லூஸாக விட்டு, சட்டென கண்ணைக் கவரும் மேக்அப், கோஹ்ல்-லைன்டு கண்கள், சிவந்த உதடுகள் என விழாவுக்கு அவர் வந்திருந்த ஸ்டைல் ரசிகர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் சொக்க வைத்துவிட்டது.

சினிமாவில் பெண்களின் சாதனைகள் என்ற தீமில் நடைபெற்ற சினிமா கேளாவுக்கு வாலண்டினா பிராண்டை கத்ரீனா கைஃப் தேர்ந்தெடுத்தது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. பாலிவுட்டில் ஜென்டர் ஈக்குவாலிட்டியை நிரூபிக்கும் இருந்த தோற்றம் இந்த ஆண்டின் பேஷன் டிரெண்டில் 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அனுஷ்கா சர்மா : இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை பைனல் மேட்சுக்காக வந்திருந்தார் அனுஷ்கா சர்மா. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. அதில் ஸ்டைலான பிரிண்டடு புளு அண்டு ஒயிட் டிரஸ்ஸில் கலக்கலாக தோன்றினார்.

Year ender: 2023 ஆம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய டாப் 5 பேஷன் டிரெண்டுகள்

அவரது டிரஸ் ஹால்ட்டர் நெக்லெனுடன் மிக அழகான டிராபிக்கல் பிரிண்ட் போடப்பட்டிருந்தது. இந்த பிரிஸ்டைன் ஒயிட் டிரஸ்ஸில் கான்ட்ராஸ்டிங் புளு கலர் பட்டர்பிளைகள், மரங்கள் இன்னும் ஏராளமான பிரிண்ட் டிசைன்கள் இருந்தது. கண்கவர்ந்த இந்த டிரஸ்தான் இந்தாண்டில் அவரை பேஷன் டிரண்டில் 5ஆவது இடத்தில் நிறுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+