2024ன் கருப்பு பக்கம்.. 1.5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்த டெக் நிறுவனங்கள்..!

2024 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப துறையில் 1.50 லட்சம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தொடர்ந்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டிலும் ஊழியர்கள் பணி நீக்கம் பெரிய அளவில் தொடர்ந்தது.

டெஸ்லா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கின. மாறிவரும் பொருளாதார சூழல்கள் மற்றும் சிக்கன நடவடிக்கை, தேவைக்கு ஏற்ப மனித வளத்தை மாற்றி அமைப்பது, நிறுவன கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களை குறிப்பிட்டு சர்வதேச அளவில் பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் 1.50 லட்சம் பேரை நடப்பு ஆண்டில் மட்டும் வேலையிலிருந்து நீக்கி உள்ளன.

2024ன் கருப்பு பக்கம்..  1.5 லட்சம் பேரை பணிநீக்கம் செய்த டெக் நிறுவனங்கள்..!

அதிகபட்சமாக இன்டெல் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 15000 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனம் 10 மில்லியன் டாலர்களை சேமிக்க முடியும் என அந்த நிறுவனம் கூறியது. அது தவிர மூலதன செலவினம் மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்டெல் நிறுவனம் கூறியது.

எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 20,000 பேரை குறைத்தது . ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான ஊழியர்களும் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டனர். அனைத்து துறைகளிலிருந்தும் 20,000 பேரை எலான் மஸ்க் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.

சிஸ்கோ நிறுவனம் நடப்பாண்டில் இரண்டு முறை பணி நீக்க நடவடிக்கையை அறிவித்தது . பிப்ரவரி மாதம் 4000 ஊழியர்களும், பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6000 ஊழியர்களும் என மொத்தம் 10000 ஊழியர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஊபர் நிறுவனம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தங்கள் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 6700 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. இந்த நிறுவனம் தானாகவே இயங்கக்கூடிய கார்களை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் நடப்பு ஆண்டில் தங்களுடைய ஊழியர்களில் 2500 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனியர் அளவிலான ஊழியர்கள் ஆவர்.

இந்தியாவை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது பைஜூஸ் நிறுவனம் ஆகும். நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் 2500 பேரை வேலையில் இருந்து நீக்கியது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+