2024 ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்களும் பெருமளவில் லாபம் ஈட்டி வளர்ச்சி அடைந்திருந்தாலும் சில நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்து திவால் நிலைக்கு சென்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் திவால் நிலைக்கு சென்ற முக்கியமான நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டப்பர்வேர்: உலகப் புகழ்பெற்ற டப்பர்வேர் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு இயர்ல் டப்பர் என்பவரால் தொடங்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறுவனம் தான் டப்பர்வேர்.

உலகம் முழுவதும் வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் டப்பாக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் திவாலானதாக அறிவித்தது.
எவர்கிராண்டே: சீனாவை சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே 2024ஆம் ஆண்டில் திவாலானதாக அறிவித்தது. இதனால் சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அதிர்ச்சி அடைந்தன.
சீனாவில் ரியல் எஸ்டேட் சந்தை வீழ்ச்சி அடைந்ததே இதற்கு காரணம். 2024 ஆம் ஆண்டில் மிக மோசமான வீழ்ச்சியை கண்ட நிறுவனமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனம் கடன் வைத்திருப்பதாக தெரிவித்தது.
நார்த்வோல்ட்: ஸ்வீடனை சேர்ந்த பேட்டரி தயாரிப்பு நிறுவனமான நார்த் வோல்ட் திவால் ஆனதாக நவம்பர் மாதம் அறிவித்தது. 5.8 பில்லியன் டாலர்கள் கடன் இருப்பதாகவும் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்தது.
தி பாடிஷாப்: பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய காஸ்மெடிக்ஸ் பிராண்டான தி பாடி ஷாப் திவால் ஆனதாக மார்ச் மாதம் அறிவித்தது. உயர்ந்து வரும் பண வீக்கம் மற்றும் போட்டி நிறுவனங்களின் விலை குறைந்த பொருட்கள் காரணமாக தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து விட்டோம் என தெரிவித்த பாடிஷாப் நிறுவனம் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாக அறிவித்தது.
ரெட் லாப்ஸ்டர்: உலக அளவில் மிகப்பெரிய கடல் சார்ந்த உயிரினங்களின் உணவக செயினான ரெட் லாப்ஸ்டர் கடந்த மே மாதத்தில் தங்கள் நிறுவனம் மிகப்பெரிய கடனில் சிக்கி இருப்பதாகவும் திவால் ஆகிவிட்டதாகவும் அறிவித்தது. 1 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் இருப்பதாக அந்த நிறுவனம் கூறியது.
ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்: அமெரிக்காவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் இருப்பதாகவும் அதனை திரும்ப செலுத்த முடியவில்லை என்று கூறி திவால் நடைமுறைகளுக்கு விண்ணப்பம் செய்தது.


Click it and Unblock the Notifications