2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டினை பொறுத்தவரையில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதற்கு விதை போட்ட ஆண்டாக மாறியிருக்கிறது.2024 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடுகள் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தில் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஸ்டாலின் அரசு தன்னுடைய உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது.

இந்த மாநாட்டில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்துகொண்டு பெருமளவிலான முதலீடுகளை மேற்கொண்டன. இந்த மாநாட்டின் போது தான் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சென்னையின் புகழ்பெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் அறிவிப்பினை வெளியிட்டது.
ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாடு 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தது. இதன் மூலம் மாநிலத்தில் 26 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதில் குறிப்பாக வியட்நாமை சேர்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்களுடைய ஆலையை நிறுவ இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் அந்த பகுதியில் புதிதாக 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 5000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்த்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவன தலைவர்களை அவர் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வழங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வாயிலாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 7618 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இந்த முதலீடுகள் வாயிலாக 12,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தவிர மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன் விளைவாக இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் நான்கு சக்கர மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
அதேபோல தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் சிப்காட்டுகள் மற்றும் மினி டைடல் பூங்காக்களை அமைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications