குஜராத்: 2024 ஆம் ஆண்டில் இந்தியர்கள் மட்டுமின்றி உலகளவில் அதிகமாக பேசப்பட்ட ஒரு திருமண நிகழ்வு என்றால் அது அம்பானிக்கு வீட்டு திருமண நிகழ்ச்சியாக தான் இருக்கும்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் , ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுமார் 600 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக பிரம்மாண்டமாகவும் மிக ஆடம்பரமாகவும் செலவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஒரு திருமணம் இது. மார்ச் மாதம் தொடங்கிய நிகழ்வுகள் ஜூலை மாதம் தான் நிறைவு பெற்றன.

முதன்முறையாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர் இந்த நிகழ்வில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, பிரபல பாடகி ரிஹானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்காக சுமார் 130 தனி விமானங்கள் குஜராத் விமான நிலையத்திற்கு வந்தன.
பில் கேட்ஸ், மார்க் ஜக்கர்பெர்க், டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பல்வேறு இந்திய திரை பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் இதில் அரங்கேறின.
இதனை அடுத்து மே மாத இறுதியில் வெளிநாட்டில் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டி நடத்தப்பட்டது. அதில் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் , கேட்டி பெரி, பிட்புல் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. தீம் அடிப்படையில் நடந்த இந்த பார்ட்டியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் திரளாக சென்று கலந்து கொண்டனர்.
ஜூலை இரண்டாம் தேதி மும்பையில் மிகப்பிரமாண்டமான முறையில் அம்பானி குடும்பத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றி மிகப்பெரிய திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜஸ்டின் பைபர் இந்தியாவிற்கு வருகை தந்தை இவர்களின் திருமண நிகழ்வில் தன்னுடைய இசை கச்சேரியை நிகழ்த்தினார் .இது மட்டும் இன்றி ரன்வீர் சிங், சல்மான் கான் போன்ற திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டு நடனமாடினர்.
தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிவிமானத்தில் சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்வுக்காக அம்பானி குடும்பம் கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர்களை செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக வெளிநாட்டு பாடகர்களுக்கு பல லட்சம் கோடிகளை வழங்கி அழைத்து வந்துள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள், மணமகன், மணமகள் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவையும் பெருமளவில் மக்களின் கவனம் பெற்றன.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications