2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல வால்மார்ட் குழும உரிமையாளர்களான வால்டன் குடும்பத்தினர் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
வால்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 432.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது வால்டன் குடும்பத்தினர் வால்மார்ட் குழுமத்தில் 46 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. வால்மார்ட் நிறுவன பங்கின் மதிப்பு உயர்ந்ததே இவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்ததுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. வால்மார்ட் நிறுவனம் உலகம் முழுவதும் 10,600 கடைகளை வைத்து நடத்தி வருகிறது.

வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனம் வால்மார்ட் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 648.1 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாம். அரச குடும்பத்தை சேராத உலகின் பணக்கார குடும்பம் என்ற பெருமையும் வால்டன் குடும்பத்திற்கு உண்டு.
அல்நஹ்யான் குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு குடும்பம். இவர்களுடைய சொத்து மதிப்பு 323.9 பில்லியன் டாலர்கள் ஆகும். உலக அளவில் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் இவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர் . எண்ணெய் வளமிக்க சொத்துக்களும் பல்வேறு நிறுவனங்களிலும் இவர்கள் மேற்கொண்டிருக்கும் முதலீடுகளுமே இவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
தற்போது அல்நஹ்யான் குடும்பத்தின் தலைவராக ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் செயல்படுகிறார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் அபுதாபியின் அரசராகவும் செயல்பட்டு வருகிறார்.
கத்தாரை சேர்ந்த அல்தானி குடும்பம் 172.9 பில்லியன் டாலர்களோடு உலக பணக்கார குடும்பங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கிட்டதட்ட 8 தலைமுறைகளாக இந்த குடும்பம் செல்வ வளம் மிக்க குடும்பமாக இருந்து வருகிறது. எண்ணெய் வளமிக்க சொத்துக்களே இதற்கு காரணமாகும்.
பிரான்ஸை சேர்ந்த ஹெர்மன்ஸ் குடும்பம் 170.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்போடு 2024 ஆம் ஆண்டின் உலக பணக்கார குடும்பங்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 1837 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பிரெஞ்சு நிறுவனம்தான் இது. தோல் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் , வாசனை திரவியங்கள், கைகடிகாரங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது .
கோச் குடும்பம் அமெரிக்காவை சேர்ந்த எண்ணெய் துறையில் இயங்கி வரக்கூடிய இரண்டாவது பெரிய தனியார் நிறுவனம். இந்த குழுமத்திற்கு உரிமையாளர்களாக இருக்கக்கூடிய குடும்பத்தினர் 148.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.
உலக பணக்கார குடும்பங்களின் பட்டியலில் அம்பானியின் குடும்பம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 99.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு குடும்பமும் இடம் பிடித்துள்ளது மிஸ்திரி குடும்பம் அதாவது சப்பூர்ஜி பாலோஞ்சி குடும்பத்துக்கு சொந்தமான குடும்பத்தை ஆண்டு வரக்கூடிய மிஸ்திரி குடும்பம் 41.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்போடு இந்த பட்டியலில் 23வது இடத்தை பிடித்திருக்கிறது.
Story Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications