டெல்லி: 2024ஆம் ஆண்டில் மத்திய அரசு பல்வேறு முத்தான திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் இந்த முறை இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டும் தேர்தல் நடந்து முடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழு நீள பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பாண்டில் அரசு அறிவித்த திட்டங்களில் முக்கியமானது சூரிய ஒளி மின்சக்தி திட்டம். இந்தியாவில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை அமைத்து சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவது என்பதே இதன் இலக்காகும்.
இவ்வாறு தங்களுடைய வீடுகளில் சோலார் பேனல்களை அமைத்து மின் உற்பத்தியில் ஈடுபடக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
புதிதாக வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்களுக்கு என ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி முதன்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு முதல் மாத சம்பளமாக அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என இந்த திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதல் மாத சம்பளமாக ரூபாய் 15 ஆயிரத்தை அரசு வழங்கும் இது மூன்றாக பிரித்து ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும். இதற்கு அந்த ஊழியரின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் 1.2 கோடி பேர் பயனடைவார்கள் என அரசு கூறி இருந்தது.
பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு கோடி இளைஞர்களுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தில் இன்டர்ன்ஷிப்பில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மாத உதவி தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
நடப்பாண்டில் அரசு அறிவித்த மற்றொரு முக்கியமான திட்டம் 70 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எந்த வித வருமான உச்ச வரம்பும் இல்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ காப்பீடு பெற முடியும். தற்போது அரசு செயல்படுத்தி வரக்கூடிய ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications