முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே ஃபேன் பேஸ் குறையாது. மாம்பழங்கள் பொதுவாக பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். இதனால் நம்மில் பெரும்பாலானோர் ஒரு ஆண்டு முழுவதும் இந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் இது ஒரு பருவ கால பழமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மா மரங்கள் விளைச்சலைத் தரும். கோடை மாதங்கள் தான் மாம்பழ சீசன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவித்து சாதித்து காட்டியுள்ளார். அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பீகாரில் உள்ள தர்பங்கா நகரத்தைச் சேர்ந்த விவசாயியான அகிலேஷ் சவுத்ரி, தனது பழத் தோட்டத்தில் பலவிதமான மாமரங்களை வைத்துள்ளார். அவை ஆண்டு முழுவதும் காய்க்குமாம். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் ஒருபுறமும், மாங்காய்கள் ஒரு புறமும், பழுத்த மாம்பழங்கள் ஒருபுறமும் இருக்குமாம். இதுபோன்ற டஜன் கணக்கான மரங்கள் அவருடைய தோட்டத்தில் உள்ளன. வருடம் முழுவதும் அவை விளைச்சளைத் தருகின்றன.

இது போன்ற மாமரங்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பே கிடையாது. பொதுவாக நாம் பார்க்கும் மரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது கோடை காலத்தில் மட்டுமே பழங்களைத் தரும். ஆனால் இந்த தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கிறது.
மேலும் அகிலேஷ் சவுத்ரி தனது தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பழங்களைத் தரும் மரங்களை வளர்த்து வருகிறார். இதற்காக அவர் கடினமாக உழைக்கிறார். இதனால் அப்பகுதியில் சில மாதங்களை தவிர ஆண்டின் ஒவ்வொரு சீசனிலும் மாம்பழங்கள் கிடைக்கிறது. அந்த மாதங்களில் மாம்பழங்கள் பழுத்த உடன் மரங்கள் உடனடியாக பூக்கத் தொடங்கிவிடுகிறது.
அகிலேஷ் தோட்டத்தில் கிடைக்கும் மாம்பழங்கள் மற்றும் மாங்காய் வகைகள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வகை மாம்பழங்கள் மிகவும் சுவை கொண்டதாக உள்ளதால், மக்கள் அவற்றை அதிகம் விரும்புகின்றனர்.
இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள், மாங்காய்கள் மற்றும் பழுத்த மாம்பழங்களை நம்மால் காண முடியும். இந்த மரங்கள் முஜாஹ்பூர் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை என்றும், ஒவ்வொரு மாங்காய் எடையும் 500 கிராம் முதல் இருக்கும் என்றும் அகிலேஷ் கூறியுள்ளார்.
நம் நாட்டில் உள்ள விவசாயிகள் இங்கு விளையவே விளையாது என்று கூறப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தொடர்ந்து விளைவித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு விவசாயி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழங்களை உடுப்பியில் பயிரிட்டு சாதித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். முடியாது என்ற ஒன்று இல்லை. சற்று முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications