போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு மாநகரில் மெட்ரோ ரயில்கள் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு பகுதிகளையும் இணைக்க கூடிய வகையில் நம்ம மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ நிலையங்களை கட்டி வருகிறது.
19.15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மஞ்சள் நிற வழித்தடம் ஆர்வி சாலையில் இருந்து பொம்மசந்திரா வரை கட்டப்பட்டிருக்கிறது. இன்னும் இது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எப்பொழுது இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் என பெங்களூரு வாசிகள் காத்திருக்கின்றனர்.இந்த சூழலில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மஞ்சள் நிற வழிதடத்தில் ஜூன் மாதத்தில் இருந்து ரயில்கள் இயங்க தொடங்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் பகுதி அளவு மட்டுமே சேவைகள் தொடங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக ஐந்து ரயில் நிலையங்கள் மட்டுமே மெட்ரோ ரயில் இன்று செல்லும் வகையில் சேவைகள் தொடங்கப்படும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் கூறியிருக்கிறது. 19.15 கிலோமீட்டர் நீளம் கொண்ட பெங்களூரு மஞ்சள் வழித்தடம் ஆர்.வி மஞ்சள் வழித்தடத்துக்கான கட்டுமான பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. ஆனால் இந்த பாதையில் இயக்கப்படுவதற்கு தேவையான ரயில் பெட்டிகள் கொள்முதல் தாமதமாவதன் காரணமாக இந்த பாதையில் முழுவதுமாக இன்னும் ரயில்கள் இயக்கம் தொடங்கப்படவில்லை.
இந்த சூழலில் தான் மூன்று ரயில்களை கொண்டு இந்த பாதையில் பகுதி அளவு ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் 30 நிமிட இடைவெளிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த ரயில்கள் தங்களுக்கு வந்து சேர்ந்தவுடன் ரயில்கள் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் இந்த மஞ்சள் நிற வழி தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தெற்கு பெங்களூருவையும் எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளையும் இணைக்கக்கூடிய முக்கிய ஒரு வழித்தடமாக மஞ்சள் நிற வழி தடம் இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த நிறுவனத்திடம் 216 ரயில் பெட்டிகளை வாங்குவதற்காக 1578 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியிருந்தது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி அந்த சீன நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ரயில் பெட்டிகள் உற்பத்தி ஆலையை நிறுவவில்லை. இதனை எடுத்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இந்த நிறுவனம் கொல்கத்தாவை சேர்ந்த டிடாகர் நிறுவனத்தோடு இணைந்து பெங்களூரு ரயில் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குகிறது.


Click it and Unblock the Notifications