சென்னை: யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை மே 1 முதல் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் அனைத்து பயன்பாட்டு கட்டணங்களுக்கும் கூடுதல் சர்ஜ் கட்டணங்களை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிவாயு, நீர், இணைய சேவைகள் மற்றும் கேபிள் சேவைகள் ஆகியவை அடங்கும்.
கடந்த சில மாதங்களாக, கிரெடிட் கார்டுகளை வழங்கும் பல நிறுவனங்கள் தங்கள் ரிவார்டு திட்டங்களை மாற்றி வருகின்றன. ரிவார்ட்ஸ் பெறும் விஷயங்களின் பட்டியலிலிருந்து சில யூட்டிலிட்டி கட்டணங்களுக்கு குறிப்பாக மக்களின் அடிப்படை சேவைகளுக்காக செலுத்தும் பில்கள், காப்பீடு மற்றும் வீட்டு வாடகை போன்றவற்றின் கிரெடிட் கார்டு பேமெண்ட்களுக்கு வழங்கும் ரிவார்ட் பாயின்ட்களை வங்கிகளும், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அகற்றியுள்ளன.

ஆக்சிஸ் பேங்க் சமீபத்தில் தங்கள் கிரெடிட் கார்டுகளில் பெரிய மாற்றங்களைச் செய்தது. இப்போது, மற்ற நிறுவனங்களும் அதையே பின்பற்ற நினைக்கின்றன.
யெஸ் பேங்க்: உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யூட்டிலிட்டி பில்களுக்கு மொத்தம் ரூ.15,000க்கு மேல் கட்டணம் செலுத்தினால் 1% சர்சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்து யெஸ் பேங்க் வசூல் செய்யும். ஆனால், உங்களிடம் யெஸ் பேங்க் இன் பிரைவேட் கிரெடிட் கார்டு இருந்தால், இந்த கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
எனவே, உங்களின் மொத்த பயன்பாட்டுக் கட்டணம் (எரிவாயு, மின்சாரம், இணையம் மற்றும் இன்சூரன்ஸ்) ஒரு மாதத்தில் ரூ. 15,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது . ஆனால் நீங்கள் 15,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தால், கூடுதல் தொகைக்கு 1% கட்டணம் மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்: மறுபுறம், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்களின் மொத்த யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள் ரூ. 20,000க்கு மேல் இருந்தால் மட்டுமே 1% மற்றும் ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கும். உங்களிடம் ஃபர்ஸ்ட் பிரைவேட் கிரெடிட் கார்டு, எல்ஐசி கிளாசிக் கிரெடிட் கார்டு அல்லது எல்ஐசி செலக்ட் கிரெடிட் கார்டு இருந்தால் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது.
எனவே, ஒரு மாதத்தில் உங்களின் மொத்த யூட்டிலிட்டி கட்டணம் ரூ. 20,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் நீங்கள் 20,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தால், கூடுதல் தொகைக்கு 1 % கட்டணம் மற்றும் 18 % ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பயன்பாட்டு பில்களை செலுத்த கூடுதல் கட்டணங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மதிப்பாய்வு செய்யும் தளமான டெக்னோஃபினோவின் நிறுவனர் சுமந்த மண்டல் கூறியதாவது , "யுடிலிட்டி பேமென்ட்டுகள் வங்கிகளுக்கு மிகவும் லாபகரமானவை அல்ல, எனவே மற்ற வங்கிகள் எஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற பேங்குகள் கூடுதல் கட்டணங்களைச் சேர்க்கத் தொடங்கும். சிலர் தனிப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பிசினஸ் செலவுகளை செய்து ரிவார்ட்ஸ் பெறுகிறார்கள். இந்த வகையான தவறான பயன்பாட்டை நிறுத்த, வங்கிகள் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்துகின்றன.
கூடுதல் கட்டணங்களைச் சேர்ப்பது முதலில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் சிலரைத் தொந்தரவு செய்தாலும், பணத்தில் கவனமாக இருப்பது மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications