சென்னை: இந்திய வங்கிகள் வலிமையான நிதி ஆதாரத்துடன் இருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வரும் வேளையில் தனியார் வங்கியான யெஸ் வங்கி, மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஐடி, டெக், விருந்தோம்பல் போன்ற சில துறையில் பணிநீக்கம் தொடர்ந்து இருந்து வந்தாலும் முதல் முறையாக வங்கித்துறையில் பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைவிட முக்கியமாக யெஸ் வங்கி போல் பிற வங்கிகளும் பணிநீக்கம் செய்வதில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது யெஸ் வங்கியின் பணிநீக்க அறிவிப்பில் ஹோல்சேல் முதல் ரீடைல் சேவை பிரிவு வரை பல்வேறு துறைகளிலும், கிளைகளிலும் இந்த பணிநீக்கம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. யெஸ் வங்கியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் குறைந்தது 500 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல பணிநீக்க சுற்றுகள் வரும் நாட்களில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது இதனால் யெஸ் வங்கி ஊழியர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
பொதுவாக வங்கி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அரிதாக நடக்கும் விஷயம், பொதுத்துறை வங்கிகளில் ஒருவர் நுழைந்துவிட்டால் லைப் செட்டில், இதுதான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கும் முக்கிய செல்லிங் பாயின்ட் ஆக உள்ளது, இதனாலேயே வங்கி பணிகளுக்கு ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். இதேபோல் தனியார் வங்கித்துறையிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான், ஆனால் தற்காலிக ஊழியர்கள் அவ்வப்போது வெளியேற்றப்படுவதுண்டு. ஆனால் பணிநீக்கம் பெரிதாக இருந்தது இல்லை.
இந்த நிலையில் யெஸ் வங்கியில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யெஸ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"பணியாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தும், வங்கியின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் " என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பணிநீக்கத்தைப் பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் யெஸ் வங்கி பங்கு 0.42 சதவீதம் அதிகரித்து 24.11 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் யெஸ் வங்கியின் சந்தை மதிப்பு 75,580 கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல் யெஸ் வங்கி செலவுகளைக் குறைக்க டிஜிட்டல் வங்கி சேவையில் அதிகம் முதலீடு செய்ய, கையால் செய்யும் பணிகளைக் குறைப்பதைத் தீவிரமாக களையெடுத்து வருகிறது. 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டுகளுக்கு மத்தியில் வங்கி ஊழியர் செலவுகள் 12 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் யெஸ் வங்கி திவால் ஆவதிலிருந்து தப்பித்த பிறகு, தற்போதைய நிர்வாக இயக்குநர் பிரசாந்த் குமார் பொறுப்பேற்றார். இவர் பதவிக்கு வந்த காலகட்டமான 2020 ஆம் ஆண்டில் இதேபோன்ற பணிநீக்க நடவடிக்கையை யெல் வங்கி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications