இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் நிலையில் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதம் உயரும்போது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் புதிய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் யெஸ் வங்கி தற்போது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக தெரிவித்து உள்ளது.
யெஸ் வங்கி
தனியார் துறை வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி நேற்று முதல் அதாவது அக்டோபர் 12-ஆம் தேதி முதல் புதிய சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது 2 கோடிக்கும் குறைவாக பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 2 கோடிக்கும் குறைவாக பிக்சட் டெபாசிட் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு அதிகபட்சமாக 6.75 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
7.75% வட்டி
யெஸ் வங்கியின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தின்படி 20 மாதங்கள் முதல் 22 மாதங்கள் வரை முதலீடு செய்யும் பொது மக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்குகிறது.
வட்டிவிகிதம்
யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் அக்டோபர் 12, 2022 முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வட்டி விகித விவரங்களை தற்போது பார்ப்போம்.
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
- 7-14 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.25% வட்டி
- 15-45 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.70% வட்டி
- 46-90 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.10% வட்டி
- 3-6 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.75% வட்டி
- 6-9 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.50% வட்டி
- 9-12 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 5.75% வட்டி
- 12-18 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.25% வட்டி
- 18-120 மாதங்களுக்கான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.75% வட்டி
மூத்த குடிமக்களுக்கு வட்டி
யெஸ் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 36 மாதங்களில் முதிர்ச்சியடையும் முதலீடுகளுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகிதத்தையும் 36 மாதங்கள் முதல் 120 மாதங்களில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்களுக்கு 75 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications