ஒரே வாரத்தில் 18% வளர்ச்சி கண்ட யெஸ் பேங்க்.. என்ன காரணம்..?

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 18 சதவீத வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்கள் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கணிசமான உயர்வை மட்டுமே சந்தித்து வர்த்தகம் முடிவடைந்த யெஸ் வங்கி பங்குகள் சனிக்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் ஈர்ப்பின் காரணமாக யெஸ் வங்கி பங்குகள் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்து 1.53 சதவீத வளர்ச்சியை அடைந்து ஒரு பங்கு விலை 14.57 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் யெஸ் வங்கி சந்தித்து வந்த பல பிரச்சனையின் காரணமாக இவ்வங்கி பங்குகள் சுமார் 68 சதவீத வீழ்ச்சியை அடைந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 18 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த அதீத வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா..? வாங்கப் பார்ப்போம்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

கடந்த வாரம் அமெரிக்கத் தேர்தல் எதிரொலியால் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.

இந்த அதிரடி வளர்ச்சி காலகட்டத்தில் யெஸ் வங்கி MSCI இந்தியா குறியீட்டில் சேர்க்கப்பட்டதன் எதிரொலியாக அதிரடியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 

12 நிறுவனங்கள்

12 நிறுவனங்கள்

MSCI இந்தியா குறியீட்டை மறுசீரமைப்புச் செய்யப்பட்டதில் யெஸ் வங்கியுடன் சேர்த்து சுமார் 12 நிறுவனங்கள் இந்தக் குறியீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக MSCI Global Standard Index தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் யெஸ் வங்கியின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

MSCI Global Standard Index

MSCI Global Standard Index

பன்னாட்டு முதலீட்டு அமைப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்வதற்காகப் பார்க்கப்படும் முக்கியமான குறியீடு இந்த MSCI Global Standard Index. இதில் யெஸ் வங்கி சேர்க்கப்பட்டதன் வாயிலாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இவ்வங்கியில் முதலீடு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

கேர் ரேட்டிங்

கேர் ரேட்டிங்

இதேபோல் யெஸ் வங்கியின் இன்பராஸ்டக்சர் பாண்ட்ஸ் மதிப்பை கேர் ரேட்டிங் அமைப்பு 'CARE B' நிலையில் இருந்து 'CARE BBB' தரத்திற்கு உயர்ந்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய முதலீடுகளைச் செய்யத் தூண்டுதலாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+