ஹோம் சலூன் சேவை நிறுவனமான YesMadam, மன அழுத்தத்தில் இருக்கும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது. இந்நிறுவனம் தெரிவித்துள்ள படி, ஊழியர்களின் மன அழுத்தம் காரணமாக பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், இது ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
YesMadam நிறுவனத்தின் ஒரு முன்னாள் ஊழியர் லிங்க்டினில் பதிவிட்ட பதிவில், தன்னைப் போலவே மற்றொரு 100 பேரும் வேலையை இழந்துள்ளதாகவும், இதற்குக் காரணம் மன அழுத்தம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து YesMadam, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அவர்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி பெற விடுமுறை வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்களின் மன நலனை மேம்படுத்தும் பொருட்டு "Happy 2 Heal" என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுக்கு 6 நாட்கள் மனநலம் மற்றும் புத்துணர்ச்சிக்காக வழங்கப்படும். மேலும், ஊழியர்கள் வீட்டிலேயே இலவசமாக YesMadam ஸ்பா சேவையையும் பெறலாம்.

YesMadam-ன் விளக்கம் சில நெட்டிசன்களால் நன்கு வரவேற்கப்படவில்லை. HR மெயிலில் "part ways" என்ற சொல்லை பயன்படுத்தியது பணி நீக்கத்தின் மறைமுக குறிப்பாக பார்க்கப்படுகிறது எனவும் சில நெட்டிசன்கள் விளக்கம் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications