ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா? – பெண்களே முதல்ல இத பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகையாக இந்த மாதம் 5000 ரூபாயை பயனாளிகளின் கணக்கில் வரவு வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையிலேயே 5000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் எதிர்க்கட்சிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணம் வரவு வைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்பதை முன்கூட்டியே கணித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முந்திக்கொண்டு அட்வான்ஸ் முறையில் மகளிர் உரிமை தொகையை வழங்கிவிட்டது.

ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா? – பெண்களே முதல்ல இத பண்ணுங்க..!!

பிப்ரவரி,மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையையும் பின்னர் கோடைகால சிறப்பு தொகை என ஒரு 2000 ரூபாயும் என சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை பெண்களின் கணக்கில் வரவு வைத்திருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கமும் தந்து இருக்கிறார். இது தவிர திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வழங்கப்படக்கூடிய 1000 ரூபாய் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் தமிழ்நாட்டின் 1 கோடியே 31 லட்சம் பெண்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை அதுவுமாக காலையிலேயே தங்களுடைய அக்கவுண்டிற்கு 5000 ரூபாய் வந்தது பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என பலரும் தெரிவிக்கின்றனர். இதனிடையே சிலர் 5000 ரூபாய் பணம் வந்து சேரவில்லை, மெசேஜ் எதுவும் வரவில்லை என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

உங்களுடைய கணக்கிற்கு இதுவரை மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றால் சில விஷயங்களை நீங்கள் சரி பார்ப்பது நல்லது. உங்களுடைய வங்கி கணக்கில் இந்த பணம் போடப்பட்ட உடனேயே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும்.

கடந்த மாதம் வரை எனக்கு மெசேஜ் வந்தது இந்த மாதத்தில் இப்போது வரை மெசேஜ் வரவில்லை என்பவர்கள் இன்று மாலை வரை காத்திருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு மெசேஜ் வராமல் இருக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட அந்த வங்கியின் மொபைல் செயலியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் ஓபன் செய்து ஸ்டேட்மெண்ட்டை செக் செய்தால் உங்களுடைய கணக்கிற்கு பணம் வந்திருக்கிறதா இல்லையா என்பது தெரிந்து விடும்.

கடந்த மாதம் வரை பணம் வாங்கிய அனைவருக்குமே கண்டிப்பாக இந்த மாதமும் இந்த 5000 ரூபாய் வந்து இருக்கும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணம் வர வைக்கப்படுவது கிடையாது. பகுதி பகுதியாகவே அரசு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் என்பதால் சிலருக்கு காலையிலேயே பணம் வந்திருக்கும் சிலருக்கு பகலில் பணம் வந்திருக்கும் இதனால்தான் உங்களுக்கு மெசேஜ் வருவதோ அல்லது பணம் வந்து சேர்வதோ தாமதமாகலாம். எனவே இன்று மாலை வரை பொறுத்து இருக்கவும்.

இன்று மாலை வரை உங்களுக்கு மெசேஜ் வரவில்லை என்றால் உங்களுடைய வங்கிக் கணக்கு எந்த வங்கியில் இருக்கிறதோ அந்த வங்கியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பது நல்லது. சிலருக்கு மெசேஜ் வரவில்லை என்றாலும் வங்கி கணக்கில் பணம் வந்து இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+