உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய கொள்கை.. ரூ.30000 கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்பு..!

சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான், இதேபோல் இந்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தைச் சேவை துறை ஆதிக்கத்தில் இருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்து மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்விரண்டுக்கும் ஏற்ப யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு மிஸ் செய்து விட்டதா..?

உத்தரப் பிரதேச அரசு

உத்தரப் பிரதேச அரசு

ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன, பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிர உபகரணங்களைத் தயாரிக்கும் இந்தியாவின் ஹாப் ஆக மாற்ற திட்டமிட்டு உள்ளது.

30000 கோடி ரூபாய் முதலீடு

30000 கோடி ரூபாய் முதலீடு

இப்புதிய கொள்கை மூலம் ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புதிதாக 30000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெறும் என நம்பப்படுகிறது, இதேபோல் 10 லட்சம் போருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.

சலுகை

சலுகை

இந்தக் கொள்கையில் முக்கியமாக எலக்ட்ரிக் வாகனங்களை உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாங்குவோருக்கு அதிகப்படியான சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 வருடத்திற்குச் சாலை வரி, பதிவு கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மானியம்

மானியம்

 

இதேபோல் எலக்ட்ரிக் பைக் வாங்குவோருக்கு 5000 ரூபாயும், கார் வாங்குவோருக்கு 25000 ரூபாயும், மற்றும் 3 சக்கர வாகனம் வாங்குவோருக்கு 5000 ரூபாயும் மானியம் வழங்குவதற்காகச் சுமார் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் மக்களுக்கானது.

பேட்டரி தொழிற்சாலை

பேட்டரி தொழிற்சாலை

உத்தரப்பிரதேசத்தில் 1000 ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் முதல் 2 அல்ட்ரா மெகா பேட்டரி திட்டங்களுக்கும், 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்படும் 1GwH பேட்டரி உற்பத்தி தளத்திற்கும் முதலீட்டில் 30 சதவீதம் மானியமாக அளிக்க உள்ளது.

உத்தரப்பிரதேசம் - தமிழ்நாடு

உத்தரப்பிரதேசம் - தமிழ்நாடு

இந்தியாவில் தற்போதும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை அமைத்துவிட்ட நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் தற்போது பேட்டரி உற்பத்தியாளர்களை ஈர்க்க இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடும் இத்தகைய பியூச்சர் தொழில்நுட்ப துறையில் கொள்கைகளை அறிமுகம் செய்தால் சிறப்பாக இருக்கும், உதாரணமாகத் தமிழ்நாடு பின்டெக் கொள்கை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+