முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் கட்டுப்பாட்டில் இயங்கும் உலகளாவிய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனமான Addverb உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா-வில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள பாட்-வெர்ஸ் எனப்படும் ரோபோ உற்பத்தித் தொழிற்சாலையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மாநில முதலீட்டாளர் நிகழ்ச்சியின் வாயிலாக சுமார் 36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதிகப்படியான விண்ணப்பங்கள் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் குவிந்துள்ளது, யோகி ஆதித்யநாத் முதல் முறையாக இந்த தகவலை பொதுவெளியில் கூறியுள்ளார்.
மேலும் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் உருவாக்கியுள்ள சிறப்பான சட்டம் ஒழுங்கு நிலைமை, மேம்பட்டு உள்ள உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், பாதுகாப்பு சூழல் போன்றவற்றின் விளைவாக முதலீடு வருகிறது. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளைக் கொண்ட முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்றும் முதல்வர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2017 க்கு முன்பு இரண்டு விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன, தற்போது 9 முழுமையாக செயல்படும் விமான நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் சாலை, நீர்வழி மற்றும் விமான வழி போக்குவரத்தையும் மேம்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
இதேபோல் இந்த வருடத்தின் இறுதிக்குள் உத்தர பிரதேச மாநிலத்தில் 12 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம், இதில் முக்கியமாக 5 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலமாக உத்தர பிரதேசம் உயர உள்ளதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications