இந்தியாவில் கார் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பமான பொருள் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது, இதனால் தற்போது சிறிய கார் முதல் ஆடம்பர கார் வரையில் விற்பனையில் கலக்கி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை பலரை கார் வாங்குவதில் இருந்து தடுத்து வருகிறது.
இதற்கு மாற்றாக எலக்ட்ரிக் கார் வந்தாலும் இதன் விலை அதிகமாக இருப்பதாலும், ரேஞ்ச் அச்சம் காரணமாகவும் மக்கள் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கும் தீர்வாகவே தற்போது ஹைப்ரிட் கார்கள் சந்தையில் அசத்தி வருகிறது, விலை, மைலேஜ், சுற்றுசூழல் பாதிப்பு என அனைத்திலும் சிறந்த வாகனமாக உள்ளது ஹைப்ரிட் கார்கள்.

இத்தகைய கார்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் அரசு ஹைப்ரிட் கார்களுக்கான ரிஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ்-ஐ முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. எலக்டரிக் கார்களுக்கு ஏற்கனவே பதிவு கட்டணம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் தற்போது ஹைப்ரிட் கார்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களுக்கான மோட்டார் வாகன வரியை முழுமையாக ரத்து செய்துள்ள வேளையில் ஹைப்ரிட் கார்களுக்கான வரியை குறைக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மோட்டார் வாகன வரி என்பது மாநில அரசின் நேரடி வரி வருவாயாக இருக்கும் வேளையில், இதில் வரியை குறைத்தால் கட்டாயம் அரசின் வருவாயில் பாதிப்பு ஏற்படும், மறைமுகமாக பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும். ஆனால் ஹைப்ரிட் கார்களை பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்க முடியும் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரியைக் குறைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த வரி குறைத்தால் ஹைப்ரிட் கார்களின் விலை 3.5 லட்சம் ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது. இது புதிதாக கார் வாங்குவோருக்கு பெரும் பலனை அளிக்கும்.
தற்போது சந்தையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் காரணத்தால் வெறும் 5 கார்கள் மட்டுமே 50 லட்சத்திற்குக் கீழ் உள்ளது. இந்த 50 லட்சம் ரூபாய் கீழ் இருக்கும் கார்கள் தான் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 95 சதவீத பங்கீடாகும்.
இந்த பிரிவின் கீழ் மாருதி நிறுவனம் தற்போது கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விடோ ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்கிறது, டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹை கிராஸ் கார்களை விற்பனை செய்கிறது. மேலும், ஹோண்டா நிறுவனம் சிட்டி ஹைப்ரிட் காரைக் விற்பனை செய்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications