மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பட்ஜெட் அறிவிப்பில் ரியல் எஸ்டேட் சொத்து விற்பனை மீதான நீண்ட கால மூலதன வரி விதிப்பில் செய்த மாற்றம் மூலம் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் அதிர்ச்சியிலிருந்த வேளையில், ஜூலை 23-க்கு பெரிய ரியல் எஸ்டேட் டீல்கள் நடக்காத நிலையில் தற்போது பிரபல தொழிலதிபர் மும்பையில் பெரும் மதிப்பில் முக்கிய சொத்தை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான யோகன் பூனாவாலா மற்றும் அவரது மனைவி மிச்செல் பூனாவாலா, தெற்கு மும்பை பகுதியில் Cuffe Parade பகுதியில் சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சொகுசு மாளிகையை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இந்த ஆடம்பரமான சொத்து, பூனாவாலா குடும்பத்தின் இரண்டாவது வீடாக மாற்றப்பட உள்ளது. இந்த மாளிகையை ரீடிசைன் செய்யும் பணியை மிச்செல் பூனாவாலா தலைமையிலான MYP டிசைன் ஸ்டுடியோ மேற்கொள்ள உள்ளது. மும்பை, புனே மற்றும் அலிபாக்கில் பல பிரீமியம் ஆடம்பர வீடுகளில் இந்த டிசைன் ஸ்டுடியோ பணியாற்றி வருகிறது.

யோகன் பூனாவாலா, பூனாவாலா இன்ஜினியரிங் குரூப்பின் தலைவராக உள்ளார். இந்த குழுமத்தில் இண்டர்வால்வ் பூனாவாலா, எல்-ஓ-மேட்டிக் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பங்குதாரராகவும் உள்ளார் யோகன் பூனாவாலா. அவர் பூனாவாலா பைனான்சியல் நிறுவனத்தின் தலைவராகவும், பூனாவாலா ஸ்டட் பார்ம்ஸ் மற்றும் பூனாவாலா ரேசிங் அண்ட் பிரீடிங்கின் இயக்குனராகவும் உள்ளார்.
மிச்செல் பூனாவாலா, பூனாவாலா இன்ஜினியரிங் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனராக உள்ளார்.

யோகன் பூனாவாலா, தற்போது பூனாவாலா குழுமத்தின் பைனான்சியல் மற்றும் சொத்து மேலாண்மை பிரிவுகளை கவனித்து வருகிறார். பூனாவாலா குழுமம் வர்த்தக ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான முதலீடுகள் உள்ளன. யோகன் பூனாவாலா, பூனாவாலா குழுமத்தின் தலைவர் ஜாவராய் பூனாவாலாவின் மகன் ஆவார்.
1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் இணை நிறுவனர் ஜாவராய் பூனாவாலா ஆவார். இந்த குடும்பம் ஆசியாவின் முன்னணி ஸ்டட் பார்ம்களில் ஒன்றையும் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications