இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டில் எல்லோரும் கார் பிரியர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், எந்தொரு புதிய காராக இருந்தாலும் லான்ச் ஆன அடுத்த ஒரு மாதத்திற்குள் அம்பானி வீட்டு பல அடுக்கு கார் கராஜில் இருக்கும். ஆனால் முகேஷ் அம்பானி விடவும் கார் கலெக்ஷனில் அப்பாட்டக்கராக ஒருவருர் இந்தியாவில் உள்ளார்.
இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் பூனாவல்லா குடும்பமும் ஒன்றாகும், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, இந்திய மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் பூனாவல்லா குடும்பத்துடையது. சமீபத்தில் இக்குடும்பம் நிதி சேவை துறையிலும் Poonawalla Fincrop நிறுவனத்தின் வாயிலாக இறங்கியது.

பூனாவல்லா குடும்பம் வர்த்தகம், நன்கொடை போன்றவற்றில் மட்டும் அல்லாமல் பல அரிய நகைகள் மற்றும் கார்களை சேகரிப்பதிலும் இக்குடும்பம் முக்கியமானதாக விளங்குகிறது. உதாரணமாக சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவல்லாவின் உறவினரும் பில்லியனருமான யோஹான் பூனவல்லா சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பிரத்யேக கார்களை வைத்துள்ளார்.
யோஹான் பூனவல்லா சிறப்பு மிக்க கார்களை மட்டும் அல்லாமல் பிரைவேட் ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார், மேலும் அவர் தனது கார்களை 'YZP' என்ற முதலெழுத்துக்களுடன் நம்பர் பிளேட் வைத்துள்ளார். ஆடம்பர கார் கலெக்டராக இருக்கும் யோஹான் பூனவல்லா -வின் முதல் கார் 1931 செவி.
இதை தொடர்ந்து அவர் வர்த்தகம், சொத்து மதிப்பு உயர உயர பென்ட்லி பென்டேகா, லேண்ட் ரோவர் டிஃபென்டர், ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் மற்றும் லம்போர்கினி கல்லார்டோ ஆகிய கார்களை வாங்கினார். இதன் மூலம் இவரின் கார் கலெக்ஷன் மதிப்பு மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல்.
1972 ஆம் ஆண்டு கோடீஸ்வர தொழிலதிபரான ஜவரே பூனவல்லா மற்றும் பெஹ்ரோஸ் ஆகியோருக்கு யோஹான் பூனவல்லா பிறந்தார். புனேவில் உள்ள பிஷப்ஸ் பள்ளியில் பள்ளி கல்வியை முடிந்த பின்பு யோஹான் பூனவல்லா இங்கிலாந்தில் எம்பிஏ மற்றும் புனேவில் உள்ள வாடியா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1966 ஆம் ஆண்டு தனது சகோதரர் சைரஸ் பூனவல்லாவுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற பயோ பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து நிறுவிய ஜவராய் பூனவல்லாவின் மகன் யோஹான் பூனவல்லா ஆவார்.

யோஹான் பூனவல்லா, பூனவல்லா இன்ஜினியரிங் குரூப் மற்றும் எல்-ஓ-மேட்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், பூனவல்லா பைனான்சியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். மேலும் அவர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ளார்.
இது தவிர, பூனாவல்லா ஸ்டட் ஃபார்ம்ஸ் மற்றும் Poonawalla Racing and Breeding நிறுவனங்களின் இயக்குநராகவும் யோஹான் பூனவல்லா உள்ளார். யோஹான் பூனவல்லா குதிரை வளர்ப்பு மற்றும் குதிரை பந்தயம் மத்தியில் பெரும் மதிப்பு கொண்டவர்.
அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், துபாய் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் பல குதிரை பந்தயத்தில் இவருடைய குதிரை வென்றுள்ளது. பூனாவல்லா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications