இந்தியாவில் மிகப் பிரபலமான கார் கலெக்டர்களில் ஒருவர் யோஹான் பூனவாலா. அவரது கார் கலெக்ஷனுக்காகவே காரணமாக உலகளவில் புகழ்பெற்றவர். சீரம் இன்ஸ்டிட்டியூட் அதிபர் அதர் பூனாவாலாவின் நெருங்கிய உறவினர் தான் யோஹான் பூனாவாலா.
யோஹான் பூனவாலாவிடம் உள்ள கார்களின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. விதவிதமான கார்களை அவர் வாங்கி வைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அவர் புத்தம் புதிதாக ஒரு சிவப்பு நிற சொகுசு காரை தனது கலெக்ஷனில் சேர்த்துள்ளார்.

யோஹான் பூனவாலா வாங்கியுள்ள இந்த புதிய பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் கார் இந்தியாவில் ரூ.7 கோடிக்கு விற்கப்படுகிறது. சொகுசு கார்கள் வரிசையில் மிக அதிக சக்தியுடன் செயல்படும் டபிள்யூ12 வகை இஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் காருடன் யோஹான் பூனவாலா நிற்கும் படங்கள் சமூகத் தளங்களில் இப்போது வைரலாகி வருகின்றன.
பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் காரில் டபிள்யூ 12 ஸ்பீடு, 6.0 லிட்டர் டபிள்யூ 12 டர்போ சார்ஜ்டு இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் 635 PS மற்றும் உச்சபட்சமாக 900 Nm டார்க் விசையை வெளிப்படுத்தும்.
இந்தக் காரின் இஞ்சினில் ZF 8 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் இருப்பதால் ஸ்டேட்-ஆப்-தி-ஆர்ட் பெருமையை இந்த பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் கார் பெறுகிறது.
இந்த டிரான்ஸ்மிஷன் மூலம் அதிக சக்தியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் நளினமான மற்றும் சாதுர்யமான கியர் ஷிப்டுகள் இருக்கும். இந்தக் காரை சூப்பர் லிமோ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வெறும் 3.8 நொடிகளில் ஜீரோவில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் அசாத்தியமான திறனைப் பெற்றுள்ளது.
இந்தப் புதிய பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் டபிள்யூ 12 கார் அவரது கார் கலெக்ஷனில் மற்றுமொரு விஷயம் மட்டுமே. கார்கள் தவிர அவர் நிறைய ஹெலிகாப்டர்களையும் வாங்கி வைத்துள்ளார்.
அவர் தனது எல்லா கார்களிலும் தனது இனிஷியலான 'YZP' என்பதை பொறித்திருப்பார்.
கார் மீதான யோஹான் பூனவாலாவின் மோகம் அவரது இளம் வயதிலேயே தொடங்கி விட்டது. 1931 ஆம் ஆண்டு மாடல் செவ்வி கார்தான் இந்த மோகத்தை தொடங்கி வைத்தது. அவரது குடும்பம் செல்வச் செழிப்புடன் மாற மாற யோஹன் பூனவாலாவின் கேரேஜ் பெரிதாகிக் கொண்ட போனது.
பில்லியனர் பூனவாலாவின் வசம் மிக அரிதான கார்கள் உள்ளன. இவற்றை இந்தியாவில் காண முடியாது. யோஹான் பூனவாலாவுக்கு சொந்தமான கவர்ச்சியான கார்களில் பென்ட்லி பென்டேகா, லேண்ட் ரோவர் டிஃபென்டர், ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், லம்போர்கினி கல்லார்டோ உள்ளிட்டவை அடங்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications