தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவரா, குறைந்த முதலீட்டில் நல்ல ஆதாயம் தரும் தொழிலை தேடுபவரா நீங்கள், குறைந்த முதலீட்டில் தனித்துவமான தொழிலை தொடங்க விரும்பினால், குறைந்த பணத்தில் தொடங்கக்கூடிய ஒரு வணிக யோசனை உள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டமான ரஸ்க் பிஸ்கட் தயாரிப்பு தொழில் குறித்துதான் இன்று உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

ரஸ்க் பிஸ்கட்டுக்கு வீடுகள் மற்றும் உணவகங்களில் அதிக தேவை உள்ளது. சில சமயங்களில் உணவாகவும், சிற்றுண்டி தின்பண்டமாகவும் இது உள்ளது. இது எல்லா வயதினரும் விரும்பும் ஒரு உணவுப்பொருள். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
எல்லா காலத்திலும் நல்ல விற்பனையாகும் என்பதால் அதற்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். எனவே ரஸ்க் தயாரிப்பில் இறங்கி நல்ல லாபம் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை தொடங்க உங்களுக்கு குறைந்த முதலீடு போதும், இந்த தொழிலை தொடங்க அரசாங்கமும் உதவும்.
தொழில் தொடங்குவதற்காக பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களுக்கு நிதியுதவி (கடன்) வழங்கப்படும். ஆகையால் இந்த தொழிலை தொடங்குவது சிரமமான காரியமாக இருக்காது.
ரஸ்க் பிஸ்கட் வீட்டிலேயே தயாரிக்கலாம். இருப்பினும் மொத்தமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டுமானால் தானியங்கி எந்திரம் தேவைப்படும். காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) அறிக்கையின்படி, இந்த தொழிலை தொடங்க 500 முதல் 800 சதுர அடி இடம் தேவைப்படும். இடம் உங்களிடம் இல்லையென்றால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இதுதவிர எந்திரங்கள், பர்னிச்சர்கள் தேவைப்படும். கே.வி.ஐ.சி. மதிப்பீட்டின்படி, ரஸ்க் பிஸ்கட் தொழில் தொடங்க சுமார் ரூ.40 லட்சம் தேவைப்படும். உங்க சொந்த பணம் ரூ.4 லட்சத்தை மூலதனமாக போடுங்க. ரூ.25 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யலாம். இது தவிர ஒர்க்கிங் கேபிடலாக ரூ.11 லட்சம் தேவைப்படும்.
உங்கள் ரஸ்க் பிஸ்கட்டுகள் தனித்துவமான சுவை மற்றும் தரத்துடன் இருந்தால் மற்றும் நல்ல சந்தைப்படுத்துதல் மேற்கொண்டால், இந்த வணிகத்தில் இருந்து லட்சக்கணக்கில் வருவாய் பார்க்கலாம். கே.வி.ஐ.சி.யின் இந்த வணிகம் குறித்த ஐந்தாண்டு திட்ட லாப அறிக்கையின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.9.68 லட்சம் கிடைக்கும்.
இரண்டாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.11.30 லட்சமாகவும், மூன்றாவது ஆண்டில் ரூ.14.84 லட்சமாகவும், நான்காவது ஆண்டில் ரூ.21.21 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ.27.85 லட்சமாகவும் இருக்கும். எனவே நீங்கள் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் இந்த தொழிலை தொடங்கி வெற்றி பெறலாம்.


Click it and Unblock the Notifications