நம்ம ஊரு லிஸ்ட்டிலேயே இல்லயே.. தூள் கிளப்பி வரும் அகமதாபாத் இளைஞர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம். இளைஞர்களுக்கு தினமான இன்று குட் ரிட்டர்ன்ஸ் சார்பில் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் வாழ்த்துகள்.

 

சமீபத்தில் குரோவ் பிளாட்பார்ம், எந்த நகர இளைஞர்கள் முதலீட்டில் ஆர்வம் செலுத்துகின்றனர். என்ன வகையான முதலீடு செய்கின்றனர் என்பதை பற்றிய ஆய்வினை நடத்தியது.

இதில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அகமதாபாத் இளைஞர்கள் பொது பங்கு வெளியீட்டில் முதலீடு செய்துள்ளது 843.22% அதிகரித்துள்ளது.

1:5 பங்குகளாகப் பிரியும் IRCTC.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

இதே தங்கத்தில் முதலீடு 166.91% வகித்து பாட்னா முதலிடம் வகிக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் புனே, மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது கணிசமான அளவு நிலையான வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

கலக்கி வரும் புனே இளைஞர்கள்

கலக்கி வரும் புனே இளைஞர்கள்

ஐபிஓ முதலீடு தவிர, மற்ற அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் புனே இளைஞர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஐபிஓ-வில் மட்டும் அகமதாபாத் முன்னிலையில் உள்ளது.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், புனே, டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் முதலீடு செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் அனைத்து போர்ட்போலியோக்களிலும் முதலீடு செய்துள்ளனர் என்பது தான்.

தங்கத்தில் இவங்க தான் டாப்
 

தங்கத்தில் இவங்க தான் டாப்

ஐபிஓ-வில் அகமதாபாத் முன்னிலையில் உள்ள நிலையில், லக்னோ பங்கு சந்தை முதலீட்டில் முன்னிலையில் உள்ளது. இதே கொல்கத்தா மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும், ஹைத்ராபாத் தங்கத்தில் முதலீடு செய்வதில் முன்னிலையிலும் உள்ளதாக குரோவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முதல் முறை முதலீடு

முதல் முறை முதலீடு

முதல் முறையாக முதலீடு செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டினை காட்டிலும் மிகப்பெரிய அளவு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டில் முதல் முறையாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வளர்ச்சி விகிதமானது 206.08% வளர்ச்சி கண்டது. ஆனால் நடப்பு நிதியாண்டின் இரண்டு காலாண்டிற்குள்ளேயே 94.53% வளர்ச்சி கண்டுள்ளது.

பல மடங்கு அதிகரிகும்

பல மடங்கு அதிகரிகும்

முதல் முறையாக முதலீடு இளைஞர்கள் எண்ணிக்கையானது நடப்பு ஆண்டில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு முதல் முறையாக முதலீடு செய்யும் இளைஞர்கள் வயதானது 18 - 30 வயதுடையவர்களாகும்.

இளைஞர்கள் ஆர்வம்

இளைஞர்கள் ஆர்வம்

கடந்த ஆண்டில் 18 - 20 வயதுடைய முதல் முறை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையானது 226.16% அதிகரித்துள்ளது. அதே சமயம் நடப்பாண்டில் இந்த விகிதமானது தற்போது வரையில் 101.65% அதிகரித்துள்ளது.

இது இளைஞர்கள் இளம் வயதிலேயே மிகப்பெரிய அளவிலான தொகையினை சேமிக்க ஆர்வம் காட்டி வருவதையே காட்டுகின்றது என்று குரோவ் ஆய்வு கூறுகின்றது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தையினை பொறுத்த வரையில் இளைய தலைமுறையினரில், மும்பையில் இளம் பெண் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதே புனேவில் தான் ஆண்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு போக்கு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு போக்கு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு போக்கினை பொறுத்த வரையில் லக்னோவில் பெண்களே முன்னிலையில் உள்ளனர். இதனையடுத்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதே சமயம் பெங்களூரில் ஆண்கள் முன்னிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ நகரங்கள் உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

தங்கத்தின் போக்கு எப்படியுள்ளது?

தங்கத்தின் போக்கு எப்படியுள்ளது?

ஜெய்ப்பூரில் அதிகளவிலான பெண் இளம் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் நகரங்களில் பெண்கள் முதலீடு செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. .

இதே ஆண்கள் பாட்னா முன்னிலையிலும், இதனை தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.

ஐபிஓ ஐபிஓ-வின் போக்கு

ஐபிஓ ஐபிஓ-வின் போக்கு

ஐபிஓ முதலீட்டாளர்களை பொறுத்தவரையில் ஜெய்ப்பூரில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண் முதலீட்டாளர்களை தொடர்ந்து, கொல்கத்தா மற்றும் லக்னோ இடம் பெற்றுள்ளது.

ஆண்களை பொறுத்தவரையில் அகமதாபாத்தில் முன்னிலையிலும், இதனையடுத்து பாட்னா மற்றும் லக்னோவில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

லிஸ்டில் சென்னை இல்லை

லிஸ்டில் சென்னை இல்லை

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள எந்த நகரமும் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை என்பது தான். எனினும் இனியாவது பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது சேமிப்பு மற்றும் முதலீட்டினை, எதிர்கால நலன் கருதி முதலீட்டினை பற்றி யோசிக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

அப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் நீங்கள் எதில் முதலீடு செய்வீர்கள். உங்களது கருத்தினை பதிவு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You know which city youngsters interested in investments? IPO, gold, stocks, mutual funds trends

You know which city youngsters interested in investments? IPO, gold, stocks, mutual funds trends
Story first published: Friday, August 13, 2021, 19:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X