நவீன உலகில் அனைத்தும் ஆடம்பரமாகிவிட்டன. இன்றைய வாழ்க்கை முறையானது செலவுகளை நோக்கி நம்மைத் தள்ளுவதாகவே இருக்கிறது. சிறு வேலைக்காக வெளியில் சென்றாலும் 500 ரூபாயாவது செலவு செய்யாமல் வீடு திரும்ப முடியாது. இதிலும் குறிப்பாக, திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னை ஆடம்பர செலவுகள்தான்.
சிலர் திருமணம் முடித்தவுடன் தனிக்குடித்தனம் சென்றுவிடுவர். ஆனால் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பின் யார் சம்பளத்தை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொள்வது, யார் சம்பளத்தை சேமிப்பு, ஆடம்பரச் செலவுகளுக்கு வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழும்.

இப்படி A TO Z வரை ஆடம்பரமாகவே செல்லும் வாழ்க்கையில், சம்பாதிப்பதை விட, அதை சேமிப்பது மிக சவாலானதாகக் கருதப்படுகிறது. மாத சம்பளம் வாங்கும் பலருக்கும் நிதித்திட்டமிடல் (financial planning) மிகவும் கடினமாக உள்ளது. வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், என பல செலவுகளை சமாளித்து வரும் சாமாணியர்களுக்கு எதிர்காலத்திற்கான "சேமிப்பு மற்றும் முதலீடு" அவசியமாகிறது.
அந்தவகையில், "சிறுகக் கட்டிப் பெருக வாழ்" என்னும் பொன்மொழிக்கேற்ப, 24 வயது இளம்பெண் ஒருவர், தனது சிறு சேமிப்பு மூலம் 24 வயதில் 84 லட்சம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இவரது சிக்கனமான வாழ்க்கை முறையும், நிதி இலக்குகளுக்கான அர்ப்பணிப்பும், நிதி சேமிப்பு முயற்சியை மேற்கொள்ள நினைக்கும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.
24 வயதான மியா மெக்ராத். ஃபேஷன் துறையில் பணிபுரிந்து வரும் இவர், சிறுவயதில் இருந்தே சிறு சேமிப்பில் மிக ஆர்வமாக ஈடுபட்டு வந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், தேவையற்ற செலவுகள் அனைத்தையும் தவிர்த்து நிதி சேமிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
மேலும் இவருக்கு சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று கனவு இருந்துள்ளது. இதற்காக அலுவலகத்திற்கு செல்லும்போதும் கூட, மதிய உணவை வீட்டில் இருந்தே எடுத்துசெல்வது வெளியில் வாங்குவதை தவிர்க்கும் வகையில் வீட்டிலேயே தயாரித்து காபியை பாட்டில்களில் எடுத்துச்செல்வது, சிக்கனமாக ஷாப்பிங் செய்வது உள்ளிட்டவைகளை கடைபிடித்துவந்துள்ளார்.
இதனால், நிறைய பேர் காபி வாங்குவது நிதி சேமிப்புகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றெல்லாம் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் காலப்போக்கில் நாம் செய்யும் இந்த சிறிய மாற்றங்கள்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளார் மியா.
இருப்பினும், நிதி சேமிப்பதற்காக தனது விடாமுயற்சியை கைவிடாமல், விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடைகளை தவிர்த்து மலிவு விலை ஆடைகள் தேர்ந்தெடுத்து அணிந்துவந்துள்ளார். இன்றைய காலத்தில் வெளிநாடுகளில் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இளைஞர்கள், பெற்றோர்களை விட்டுவிட்டு தனியாக வாழ தொடங்குகின்றனர்.
இதனால் வீட்டு வாடகை உள்ளிட்ட அவசியமில்லாத செலவுகள் எதிர்கொள்கின்றனர். இதனை தவிர்த்து பணத்தைச் சேமிக்க உதவுவதில் மியா கூறும் விஷயம் என்னவென்றால், பெற்றோர்களுடன் வாழ்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறுகிறார்.
இதுமட்டுமல்லாமல், தினமும் காலை உணவாக முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே வாடிக்கையாக சாப்பிட்டுவந்துள்ளார். மேலும் அலங்காரம் அல்லது பிற சப்ளிமெண்ட்ஸ் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு செலவிடுவதை தவிர்த்து வருகிறார். தனது 40 வயதிற்குள் ஒரு வீட்டை வாங்க என்றும் இதற்காக ரூ. 11 கோடி சேமிப்பதே இறுதி இலக்காக வைத்துள்ள மியா, பணத்தை வீணாக்காமல் இருப்பதிலும் கவனமாக இருக்கிறார். தற்போது வரை ரூ.83 லட்சம் வரை சேமித்து வைத்துள்ளார். மேலும் இவர் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வுபெற்றால்கூட சேமிப்பு கைக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications