இந்தியாவை சேர்ந்த இளம் குடிமக்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என முன்னாள் கூகுள் பணியாளர் ஒருவர் வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் இதற்கு முன்பு பொறியாளராக பணியாற்றி வந்த தெபார்கயா தாஸ் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் பிரபலமான இன்ப்ளூயன்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் அண்மையில் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவை சேர்ந்த இளம் குடிமக்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.குறிப்பாக நாட்டின் காவல்துறை, உள்கட்டமைப்பு மற்றும் நீதித்துறையின் தோல்வி இளம் குடி மக்களுக்கு நாட்டின் மீதான நம்பிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
ஏராளமானவர்கள் தன்னிடம் அமெரிக்காவிற்கு குடிபெயர்வது குறித்து கேட்டு வருவதாக அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் அவரது பதிவுக்கு பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர்.

எப்பொழுதும் வெளிப்படையாக பேசக்கூடிய தெபார்கயா தாஸ் இந்தியாவை பெருமளவு புகழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏன் இந்தியாவில் வசிக்காமல் வெளிநாடுகளிலேயே தங்கி இருக்க விரும்புகின்றனர் என ஏற்கனவே ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார் . அது மிகவும் வைரல் ஆனது.
இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது ஆனால் ஏன் பலரும் இந்தியாவில் தங்கி இருக்க விரும்பவில்லை என்றால் அங்கே காற்று மாசு அதிகம் என அவர் பதிவிட்டு இருந்தார். அண்மையில் கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நீட் உள்ளிட்ட தேர்வுகள் தொடர்பாக நிலவும் குழப்பங்கள் உள்ளிட்டவை இளம் இந்தியர்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இவருடைய பதிவு வைரலாகி இருக்கிறது. ஒரு பயனாளர் வெளிநாட்டில் வாழ்க்கைத் தரம் இந்தியாவை விட சிறந்ததாக இருக்கிறது என்பதற்காகவே பெரும்பாலானவர்கள் அங்கே செல்ல விரும்புகின்றனர் என பதிவிட்டுள்ளார். சிலர் இந்தியாவில் இருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு நடைமுறை என்பது மோசமானதாக இருக்கிறது மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வரி நடைமுறை உள்ளிட்டவை காரணமாக பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் சிலர் அவரது கருத்துக்கே எதிராகவும் பதில் அளித்துள்ளனர். எந்த நாடுமே சிறந்த நாடு என நாம் கூறி விட முடியாது ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரிய சவால்கள் நிறைந்து இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இந்தியா அதன் சவால்களை மிகத் திறமையாக கையாண்டு வருகிறது என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications