இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் சூப்பர் அட்வைஸ்.. இளைஞர்களே கவனமா இருங்க!

இந்தியாவுக்கு பாரபட்சம் இல்லாத நேர்மையான கலாச்சாரம் தேவை. நாடு முன்னேற விரைவான முடிவுகள், தேவையற்ற தடைகள் கூடாது என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள். பிரதமர் மோடியின் இலக்குகளை நிறைவேற்ற இன்றியமையாத கலாச்சாரத்தினை பெரும்பான்மையான மக்கள் இன்னும் உள்வாங்கவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொதுவான அம்சம்

பொதுவான அம்சம்

விரைவாக முடிவெடுப்பது, விரைவாக செயல்படுத்துவது, தொந்தரவைக் குறைக்கும் பரிவர்த்தனைகள், பரிவர்த்தனைகளில் நேர்மை, பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது போன்ற கலாச்சாரத்தினை நாம் உருவாக்க வேண்டும். இதுவே அனைத்து வளர்ந்த நாடுகளையும் இணைக்கும் பொதுவானதொரு அம்சமாக உள்ளது. இத்தகைய கலாச்சார பண்புகள் மட்டுமே வளர்ச்சியினை இணைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவை விட 6 மடங்கு வளர்ச்சி

இந்தியாவை விட 6 மடங்கு வளர்ச்சி

கடந்த 1940களின் பிற்பகுதியில் இந்தியா மற்றும் சீனா என்பது ஒரே அளவுடையது தான். ஆனால் இந்தியாவினை விட சீனா ஆறு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு காரணம் கலாச்சாரம் என்பது உள்வாங்கப்பட்டது.

இந்தியாவில் கடினமாக உழைக்கும் ஒரு சிறிய கூட்டம் என்பது உள்ளது. இவர்கள் நேர்மையானவர்கள். நல்ல பணி நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றை கொண்டவர்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அப்படி இல்லை.

ஷாங்காயில் எப்படி தெரியுமா?

ஷாங்காயில் எப்படி தெரியுமா?

2006ல் ஷாங்காய் நகரில் ஒரு திட்டத்தினை செயல்படுத்தியபோது, ஷாங்காய் மேயர் அடுத்த நாளே 25 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கினார். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு சூழல் உள்ளனை. இங்கு கிழ் மட்டத்தில் இருந்து ஊழல் என்பது பெரியளவில் உள்ளது என குற்றச்சாட்டினையும் முன் வைத்துள்ளார்.

விரைவாக முடிவு எடுங்க?

விரைவாக முடிவு எடுங்க?

இந்தியாவில் மட்டுமே தொழிலதிபர்கள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றால் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஆக நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் விரைவாக முடிவெடுங்கள். அவற்றை விரைவாக செயல்படுத்துங்கள். அதனை தொந்தரவு செய்யாதீர்கள். தேவையற்ற தடைகளை போடாதீர்கள்.

மூன்லைட்டிங் வேண்டாம்?

மூன்லைட்டிங் வேண்டாம்?


இளைஞர்களுக்கு மூன்லைட்டிங் மற்றும் வீட்டில் இருந்து பணி, வாரத்திற்கு மூன்று நாள் தான் பணி என்பது போன்ற மாய வலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நெறி முறைகள் மற்றும் சோம்பலுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள் என பரிந்துரை செய்துள்ளார்.

 டெல்லி ரொம்ப மோசம்?

டெல்லி ரொம்ப மோசம்?

டெல்லியில் போக்குவத்து விதிமீறலை சுட்டிக் காட்டிய மூர்த்தி, டெல்லி நாட்டிலேயே மிகவும் ஒழுக்கம் இல்லாத ஒரு நகரம் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைந்திந்திய மேலாண்மை நிகழ்வில் கலந்து கொள்ள வந்தபோது, விமான நிலையத்திலிருந்து வந்தேன். ஒரு போக்குவரத்து சிக்னலில், நிறைய கார்கள், மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள் இருந்தன. பலரும் அலட்சியமாக போக்குவரத்து சிக்னலை மீறிச் செல்கின்றனர்.

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

ஒரு சில நிமிடம் கூட காத்திருக்க முடியாது என்றால், அவர்கள் எதற்கும் காத்திருக்க மாட்டார்கள். இதனை ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். சின்னச் சின்ன இடங்களிலும் சரியான பாதையில் செல்வதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் படிப்படியாக தாமாகவே விதிகளை மீறாமல் இருக்கும் பண்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+