தற்போதைய டிஜிட்டல் உலகில் வங்கி கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பது தெரிந்ததே.
மேலும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்வதிலும் அதிக நபர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ஆன்லைன் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு தரப்பட்டு இருக்கும் என்பதும் அந்த பாஸ்வேர்டு குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதும் அறிவிக்கப்படுகிறது.
பாஸ்வேர்டு
ஒவ்வொரு முறை வங்கிக்கணக்கை ஆன்லைனில் பயன்படுத்தும்போதும் நாம் நம்முடைய பாஸ்வேர்டை குறிப்பிட்டு ஒப்பன் செய்ய வேண்டும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த பாஸ்வேர்டை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக பலர் எளிமையாக வடிவமைக்கின்றனர். இதனால் அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள முழு தொகையையும் காலி செய்யும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வே
ஒரு குறிப்பிட்ட வகையான பாஸ்வேர்டை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எளிமையாக ஞாபகம் வைத்து கொள்ள விரும்பும் என்பதற்காக மில்லியன் கணக்கானோர் பலவீனமான பாஸ்வேர்டை வைத்து இருப்பதாகவும், அவர்களுடைய வங்கிக்கணக்குகளை ஹேக் செய்யும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் NordPass என்ற அமைப்பு எடுத்த சர்வேயில் தெரிவித்துள்ளது.
பலவீனமான பாஸ்வேர்டு
இந்த சர்வே அறிக்கையில் 1234, qwerty, Password போன்ற பாஸ்வேர்டுகள் அதிகமாக பயன்படுத்துவதால் இந்த வகை பாஸ்வேர்டுபயன்படுத்தினால் இணைய மோசடி ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த வகை பாஸ்வேர்டு வைப்பவர்கள் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த பாஸ்வேர்டுகள் வேண்டாம்
மிகவும் எளிமையான அதாவது 123456, 123456789, 12345, qwerty, கடவுச்சொல், 12345678, 111111, 123123, 1234567890 ஆகிய பாஸ்வேர்டுகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் NordPass அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கடினமான பாஸ்வேர்டு
பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் ஹேக் செய்யமுடியாத அளவுக்கு கடினமான பாஸ்வேர்ட்களாக வடிவமைக்க வேண்டும் என்றும் குறைந்தது 12 எழுத்துக்கள் கொண்ட பாஸ்வேர்டு வைத்திருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடினமான மற்றும் நீண்ட பாஸ்வேர்டுகளை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை எடுப்பது அவ்வளவு எளிது அல்ல என்றும் அதனால் நமது அக்கவுண்டில் உள்ள பணத்திற்கு பாதுகாப்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஸ்வேர்டு அமைப்பது எப்படி?
சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் ஆகியவை கலந்த ஒரு கலவையாக பாஸ்வேர்டு வடிவமைக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி 90 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications