கல்லூரி படிப்பை முடித்த பலருக்கும் தற்போது வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களும் பணிநீக்கம், செலவின குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கக் கூடிய சூழலில், வேலை வாய்ப்பு கிடைக்காமல் பல இளைஞர்களும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் Full stack இன்ஜினியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் இதற்கு நீங்கள் கல்லூரியில் பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது, சுதர்ஷன் காமத் என்பவர் ஸ்மாலஸ்ட் ஏஐ என்ற ஒரு ஏஐ சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் தற்போது Full stack இன்ஜினியர் பணிக்கு ஆள் தேவைப்படுவதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். இது தான் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக்காக இருக்கிறது. அந்த பதில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை, இதில் 60 லட்சம் ரூபாய் உங்களுக்கான அடிப்படை சம்பளமாகவும், 40 லட்சம் ரூபாய் உங்களுக்கு நிறுவன பங்குகள் மூலமும் கிடைக்கும் என கூறியுள்ளார். உடனடியாக பணிக்கு சேரும் நிலையில் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பெங்களூருவில் இந்திரா நகர் பகுதியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் தான் வேலை என்றும் குறைந்தது, 4 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் பைத்தான், உள்ளிட்ட கணினி மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எந்த கல்லூரியில் படித்திருக்கிறீர்கள், என்ன பட்டப்படிப்பை முடித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு அவசியமில்லை என தெரிவித்திருக்கும் அவர் உங்களுடைய ரெஸ்யூம் கூட எனக்கு தேவையில்லை என கூறி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இது வெறும் மேலாண்மை செய்யக்கூடிய வேலை மட்டுமல்ல ஒரு டெவலப்பர் ஆகவும் உங்களுக்கு வேலை தெரிந்திருக்க வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என நினைத்தால் உங்களைப் பற்றிய 100 வார்த்தைகளில் அறிமுகம் செய்து மற்றும் நீங்கள் செய்த வேலைகளின் லிங்குகளை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம், திறமை அடிப்படையில் வேலை என்பது பல இளைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளது. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என ஏராளமான இளைஞர்கள் கமண்ட் செய்வதை காண முடிகிறது.


Click it and Unblock the Notifications