இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. 29ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டம் அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது . இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களை சந்தித்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார்.
அக்டோபர் 1ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் இந்த செய்தியாளர் சந்திப்பில் இவர் வெளியிட போகக்கூடிய அறிவிப்பு அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவின் பங்குச்சந்தைகள் எப்படி இருக்கும் , இந்தியாவின் தொழில்கள் வளர்ச்சி எப்படி இருக்கும் , பொருளாதார நடவடிக்கைகள் எப்படி இருக்கும் உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது. இதனால் தான் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நாடு முழுவதும் கவனம் பெறக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.

ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை தற்போது மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் என்பது 5.5 சதவீதமாக இருக்கிறது . அண்மையில் தான் அமெரிக்க மத்திய வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை பின்பற்றி இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்குமா என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் நமக்கு வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்கள் , தங்க நகை கடன்கள் மீதான வட்டியும் குறையும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் இந்த செய்தியாளர் சந்திப்புக்காக தான் காத்திருக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நூறு அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை . இந்த நிலையில் தான் இந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முடியக் கூடிய கூட்டத்தில் கண்டிப்பாக வட்டி குறைப்பு குறித்து அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஓங்கி எழுந்திருக்கிறது.
இதனிடையே வட்டி குறைப்புக்கான வாய்ப்புகள் குறைந்து இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் அண்மையில் தான் அரசியல் ஜிஎஸ்டி வரி குறைப்பை கொண்டு வந்தது. இதன் மூலம் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் அடுத்த குறுகிய காலத்திற்கு குறிப்பாக இந்த பண்டிகை காலத்திற்கு மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முறை ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சென்ட்ரிசிட்டி வெல்த் டெக் நிறுவனத்தின் தலைவர் விநாயக் மகோத்ரா தெரிவிக்கிறார் .
ரிசர்வ் வங்கி தொடர்ந்து அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கை கண்காணித்து வருகிறது என கூறுகிறார். அதே வேளையில் இந்திய ஸ்டேட் வங்கி இந்த முறை 25 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி விகித குறைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் குறைந்திருப்பதை அதன் காரணமாக குறிப்பிடுகிறது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications