உடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. இப்படி இணைக்காத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎப் கணக்கில் வைப்புச் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

 

பிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. ,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..!

இப்புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த மாதம் சம்பளத்தில் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2020 சோசியல் செக்யூரிட்டி சட்டம்

2020 சோசியல் செக்யூரிட்டி சட்டம்

இதுகுறித்து ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2020 சோசியல் செக்யூரிட்டியின் 142பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், நிறுவனங்களுக்கான ECR (Electronic Challan cum Return) முறை ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட UAN கணக்கிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது..

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது..

இதேபோல் ஜூலை 1 முதல் ஆதார் எண் இணைக்காத UAN கணக்கிற்கு ஈபிஎப்ஓ அமைப்பின் எந்தச் சேவைகளும் அளிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் பிஎப் பணத்தை எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கான சேவையை ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

UAN - ஆதார் எண் இணைப்புக் கட்டாயம்
 

UAN - ஆதார் எண் இணைப்புக் கட்டாயம்

இதன் மூலம் அனைத்து ஊழியர்களும் தங்களது பிஎப் கணக்கில் தொடர்ந்து முழுமையான சேவைகள் மற்றும் நிறுவனத்தின் பிஎப் பங்கீடு ஆகியவை பெற வேண்டும் என்றால் கட்டாயம் UAN எண் உடன் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும்.

பிஎப் பணம்

பிஎப் பணம்

கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நேரத்தில் பிஎப் கணக்கில் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவசர தேவைக்கும், கொரோனா சிகிச்சைக்கும் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இந்தச் சூழ்நிலையில் EPFO அமைப்பின் புதிய கட்டுப்பாடு மக்களுக்குச் சுமையாக இருந்தாலும், கட்டாயம் செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

PMGKY திட்ட முன்பணம்

PMGKY திட்ட முன்பணம்

சமீபத்தில் கூடக் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) திட்டத்தின் கீழ் பிஎப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக ஈபிஎப்ஓ 2வது கோவிட் அட்வான்ஸ் தொகை அதாவது 2வது முன்பணத்தைப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக EPFO அறிவித்துள்ளது.

3 மாத அடிப்படை சம்பளம்

3 மாத அடிப்படை சம்பளம்

PMGKY திட்டத்தின் கீழ் ஒரு பிஎப் வாடிக்கையாளர் 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் கிராக்கிப்படி அல்லது member's credit அளவில் 75 சதவீதம், இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகையை முன்பணமாகப் பெறலாம். ஏற்கனவே முன்பணச் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் 2வது முறை முன்பணம் பெற்றுக்கொள்ள மத்திய அரசும், ஈபிஎப்ஓ அமைப்பும் அனுமதி அளித்துள்ளது.

இணைப்பது எப்படி..?!

இணைப்பது எப்படி..?!

இந்தத் தொகையைப் பெற வேண்டும் என்றாலும் பிஎப் வாடிக்கையாளர்கள் கட்டாயம் தங்களது UAN எண் உடன் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டும்.

EPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி..?! பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: epfo provident fund
English summary

Your PF amount will not be credited starting June 1, If you not link EPF account with Aadhaar

Your PF amount will not be credited starting June 1, If you not link EPF account with Aadhaar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X