பொதுவாக வீடு வாழ ஒரு இடத்தை வழங்கும், அதேசமயம் அது எதிர்காலத்திற்கான ஒரு புத்திசாலித்தனமான முதலீடாகவும் இருக்கலாம். நிலையான வருமானம் வரும் என்பதால் பலரும் தற்போது வீடுகள் கட்டி வாடகைக்கு விடுகின்றனர்.
அதேவேளையில், அதிகரித்து வரும் வருமானம் காரணமாக வாடகைக்கு வருபவர்கள் இப்போது உள்ளேயும், வெளியேயும் ஆடம்பரமான அம்சங்களை கொண்ட வீடுகளை விரும்புகிறார்கள். எனவே உங்கள் வாடகை சொத்தில் முதலீடு செய்வது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.

அதற்காக வாடகைக்கு வீடும் வீட்டை பெரிய அளவில் புனரமைப்போ அல்லது மறுவடிவமைப்போ செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மூலோபாய புதுப்பிப்புகளுடன் குறைந்த செலவில் உங்கள் சொத்தின் கவர்ச்சியை கணிசமாக மேம்படுத்தலாம். இது உங்கள் வாடகையை வருவாயை அதிகரிக்க உதவும்.
பெயிண்டிங்: உங்கள் சொத்தை பெயிண்டிங் செய்வது புத்தம் புதியதாக உணர எளிதான மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். உதாரணமாக வெள்ளை, சாம்பல் அல்லது வெளிர் போன்ற நடுநிலை மற்றும் நவீன வண்ணங்கள் பார்ப்பவர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், இடங்களை பிரகாசமாகவும் விசாலமாகவும் காட்டுகின்றன.
எனவே சரியான வண்ணங்களை தேர்வு செய்து பெயிண்டிங் செய்தால் குறைந்த செலவில் உங்கள் வீடுகள் கவர்ச்சிகரமாக மாறி விடும்.
சுத்தம்: வீடும் அதனை சுற்றியுள்ள பகுதியும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று வாடகைக்கு வருபவர்கள் எதிர்பார்ப்பார்கள். எனவே பல வருடங்களாக ஓடுகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது முதல் சமையலறை சிலாப்புகள் மற்றும் குளியலறை சாதனங்களின் பளபளப்பை மீட்டெடுப்பது வரையிலான ஆழமான சுத்தம் செய்தல் உங்கள் இடத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்தும்.
உங்களால் இந்த பணிகளை செய்வது கடினம் என்றால் கவலைப்பட தேவையில்லை, குறைந்த செலவில் வீட்டை சுத்தம் செய்து கொடுப்பதற்காகவே ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை புக் செய்து விட்டாலே அவர்கள் வந்து சுத்தம் செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.
திரைச்சீலைகள்: திரைச்சீலைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, ஆனால் அவை ஒரு அறையின் சூழலையே வியத்தகு முறையில் மாற்றும். உங்கள் சுவர்களுக்கு பொருந்தும் வண்ணங்களில் உயர்தர நேர்த்தியான திரைச்சீலைகளை மாற்றுவது உங்கள் வீட்டின் உட்புறங்களை பற்றிய பார்வையை உயர்த்தும்.
சுவர் பேனல்கள்: உங்கள் வீட்டில் அதிக புழக்கம் உள்ள பகுதிகளை சுற்றியுள்ள சேதத்தை தடுக்க சுவர் பேனல் பூச்சுகள் பயன்படுத்தலாம். மேலும் சுவர் பேனல்கள் உங்கள் வீட்டின் உட்புறத்தில் அமைப்பு மற்றும் நுட்பத்தை சேர்க்க ஒரு மலிவு வழியாகும். மேலும் சிறந்த விளக்குகள் மற்றும் நன்கு பராமரிக்கப்படும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுடன் உங்கள் வாடகை வீட்டை மேம்படுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
கிச்சன்: பொதுவாக வீட்டுக்கு வாடகை வருபவர்கள் கிச்சன் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார்கள். சில மலிவு விலை மேம்படுத்தல்கள் வாயிலாக சமையலறையின் கவர்ச்சியை அதிகரிக்கலாம். பழைய குழாய்களை நவீனமயமாக்குதல் அல்லது ஸ்டைலான பேக்ஸ்பிளாஷை சேர்ப்பது கூட அதிக முதலீடு இல்லாமல் இடத்தின் பார்வையை உயர்த்தும்.
இது போன்ற செலவு குறைந்த மேம்பாடுகளை செய்வதன் மூலம் வீட்டை பார்வையானதாக மாற்றலாம். மேலே சொன்னவற்றில் அனைத்தையும் அல்லது ஒரு சில மேம்பாடுகள் மட்டுமே நீங்கள் செய்யலாம். இதற்கு சுமார் ரூ.30,000 செலவாகும். அதேசமயம், இது ஆண்டுக்கு ரூ.60,000 என வாடகையாக ரூ.5,000க்கு மேல் கூடுதலாக பெறுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications