யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் பதவியேற்றுள்ளார். இந்த பதவிக்காக கூகுள் நிறுவனம் நீல் மோகனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறது என்பது இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் கூகுள் நீல் மோகன்-க்கு கூகுள் நிறுவனம் யாருக்கும் கொடுக்காத பெரும் தொகை போனஸ் ஆக கொடுத்தது.
10, 15 கோடி எல்லாம் இல்லை, ஒரே பேமெண்டில் ரூ.544 கோடி போனஸாக கொடுத்தது கூகுள் நிறுவனத்தின் முக்கியமான வரலாற்று.
யார் இந்த நீல் மோகன், அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கொடுக்க என்ன காரணம்..?
நீல் மோகன்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் அவர்கள், லக்னோவில் உள்ள St Francis கல்லூரியில் படித்துள்ளார். இவர் பிறந்தது இந்தியாவின் லக்னோவில் தான், ஆனால் இவர் 1985 வரை இந்தியாவில் இருந்ததாகவும், அவர் 7 மற்றும் 12 ஆம் வகுப்புகளை லக்னோவில் முடித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் நீல் மோகன் அவர்களின் தந்தை Purdue University இல் Ph.D படித்துக் கொண்டிருந்ததால், அவரது குழந்தை பருவத்தை அமெரிக்காவின் மிக்சிக்கனில் (Michigan) கழித்துள்ளார்.
யூடியூப்பின் புது CEO!
பல ஆண்டுகளாக யூடியூப் (Youtube) நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி தனது பணியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து, நீல் மோகன் அவர்கள் யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைவராக பதவி ஏற்றுள்ளார்.
நீல் மோகன் வகித்த முக்கிய பதவிகள்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல்மோகன் ஸ்டான்ஃபோர்ட் பழ்கலைக்கழக்கத்தில் படித்து பட்டம் பெற்றவர். அதனையடுத்து அவர் 2008 ஆம் ஆண்டே கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி கூகுளின் வீடியோ மற்றும் விளம்பரத் துறையின் சீனியர் தலைவராகவும் முன்னேறியுள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் Microsoft, Stitch Fix, 23andMe போன்ற நிறுவனங்களிலும் முக்கிய நிர்வாக பதவிகளிலும் பணிபுரிந்துள்ளார்.
யூடியூப்பில் அவரின் பயணம்!
நீல் மோகன் அவர்கள் 2015 ஆம் ஆண்டில் யூடியூப் நிறுவனத்தின் Chief Product officer ஆக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து அவர் யூடியூப்பின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் வேலைகளிலும் அவரின் முழுத் திறமையைக் காட்டியுள்ளார். அதனால் யூடியூப் சம்பந்தமான அனைத்து வேலைகளிலும் இவர் ஒரு Specialist என்றே அனைவரும் கூறியுள்ளனர். அதனையடுத்து யூடியூப் நிறுவனத்தின் முக்கிய நபர்களின் பட்டியலில் நீல் மோகன் இணைந்துள்ளார்.
நீல் மோகன் சம்பளம்!
யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள நீல் மோகன் அவர்களின் முழு சம்பளம் குறித்து எந்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அவருக்கு 2013 ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலர் (அன்றைய மதிப்பில் சுமார் ரூ.544 கோடி) போனஸாக வழங்கியுள்ளது.
நீல் மோகன் சம்பளத்தின் பின்னணி என்ன?
2013 ஆம் ஆண்டில் நீல் மோகனின் நிர்வாகத் திறமையை கவனித்த ட்விட்டர் நிறுவனம் அவருக்கு அங்கு முக்கிய பதவியை வழங்கியுள்ளது. அதனையடுத்து நீல் மோகன் அவர்கள் அப்பதவியை ஏற்பதை தடுக்கவே யூடியூப் நிறுவனம் அவருக்கு 100 மில்லியன் டாலர் போனஸை கூகுள் அளித்துள்ளது.
பங்குகள்
அதுவும் பணமாக அல்லாமல் 100 மில்லியன் டாலர் கூகுள் பங்குகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று அப்பங்குகளின் மதிப்பைக் கணக்கிட்டால் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கும் எனபதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications