Youtube புதிய சிஇஓ நீல் மோகன்.. இந்தியரை நியமிக்க என்ன காரணம்? சூசன் வோஜ்சிக்கி ராஜினாமா ஏன்?

உலகம் முழுவதும் மக்களைப் பிரபலமாகவும், பணக்காரர்களாகவும் மாற்றிய யூடியூப்-ஐ,கூகுள் 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கி ஆரம்பம் முதல் பார்த்து பார்த்து மெருகேற்றி, இன்று உலகின் முன்னணி வீடியோ ஷேரிங் தளமாகவும், கூகுள்-க்கு முக்கிய வருவாய் ஈட்டும் தளமாகவும் மாற்றியுள்ளது யூடியூப்.

இந்த அத்தனை பெருமைக்கும் காரணமாக இருக்கும் சூசன் வோஜ்சிக்கி யூடியூப் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஆரம்பக் கட்டம் முதல் செர்கி பிரின், லேரி பேஜ் உடன் இணைந்து பணியாற்றி வரும் சூசன் வோஜ்சிக்கி 25 ஆண்டுகளுக்குப் பின்பு கூகுள்-ஐ விட்டும், யூடியூப் சிஇஓ பதவியை விட்டும் வெளியேற்றியுள்ளார்.

சூசன் வோஜ்சிக்கி இடத்தில் தற்போது நீல் மோகன் என்ற இந்திய உயர் அதிகாரியை நியமிக்கப்பட்டு உள்ளார். சூசன் வோஜ்சிக்கி வெளியேற என்ன காரணம்..? யார் இந்த நீல் மோகன்..? கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு இந்தியர் எதற்காக..?

சூசன் வோஜ்சிக்கி

சூசன் வோஜ்சிக்கி

2014 முதல் யூடியூப் சிஇஓ-வாக இருந்த சூசன் வோஜ்சிக்கி 25 வருடமாகக் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, புதிய பாதையைத் தேர்வு செய்யப் பொறுப்புகளை விட்டு வெளியேறுவதாகச் சூசன் வோஜ்சிக்கி தனது பதிவில் தெரிவித்துள்ளார். செர்கி பிரின், லேரி பேஜ் உடன் கராஜ்-ல் பணியாற்றிய சூசன் வோஜ்சிக்கி இன்று வெளியேறியுள்ளார்.

யூடியூப் சிஇஓ பதவி

யூடியூப் சிஇஓ பதவி

யூடியூப் சிஇஓ பதவியில் இருந்து வெளியேறியிருக்கும் சூசன் வோஜ்சிக்கி தனது குடும்பம், ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த உள்ளதாகவும், பர்சனல் ப்ராஜெக்ட்-களில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூசன் வோஜ்சிக்கி டெக் துறையில் தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

வீடியோ சேவை தளம்

வீடியோ சேவை தளம்

யூடியூப், வீடியோ சேவை தளத்தில் மிகவும் முக்கியமான இடத்தைக் கொண்டு இருக்கிறது. ஆனால் டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றுடன் பெரிய வர்த்தகத்தை இழந்து தற்போது கால தாமதமாக ரயிலை அதிகப்படியாகச் செலவு செய்து பிடித்து வருவதாக விமர்சனம் நீண்ட காலமாக உள்ளது.

12000 ஊழியர்கள்

12000 ஊழியர்கள்

இதேபோல் கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளம், பொறுப்பு, இலக்கு என அனைத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மேலும் கூகுள் நிறுவனத்தில் நிர்வாக முடிவுகளை வேகமாக எடுக்கவும், புதிய மாற்றங்களை வரிவாகக் கொண்டு வரவும் பல மாற்றங்கள் சமீபத்தில் கொண்டு வரப்பட்டது.

நீல் மோகன் - புதிய சிஇஓ

நீல் மோகன் - புதிய சிஇஓ

இந்த நிலையில் தான் 2015ல் யூடியூப்-ன் தலைமை ப்ராடெக்ட் ஆபிசராக நியமிக்கப்பட்ட நீல் மோகன் தற்போது யூடியூப் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். நீல் மோகன் 2015 முதல் பல முக்கியமான திட்டத்தில் பணியாற்றி இருந்தாலும் யூடியூப் ஷாட்ஸ் மற்றும் யூடியூப் மியூசிங், பல சப்ஸ்கிரிப்ஷன் மாடல்களை உருவாக்கியதில் முக்கிய இடத்தில் உள்ளார்.

நீல் மோகன் - மைக்ரோசாப்ட்

நீல் மோகன் - மைக்ரோசாப்ட்

நீல் மோகன் 2015க்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார். யூடியூப் CFO பதவியைத் தாண்டி Stitch Fix மற்றும் ஜீனோமிக்ஸ் - பயோடெக்னாலஜி நிறுவனமான 23andMe ஆகிய இரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உள்ளார். 23andMe என்பது சூசன் வோஜ்சிக்கி-ன் சகோதரியின் நிறுவனம்.

எலக்ட்ரிக் இன்ஜினியர் - நீல் மோகன்

எலக்ட்ரிக் இன்ஜினியர் - நீல் மோகன்

நீல் மோகன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றவர். யூடியூப் CFO பதவி-க்கு முன்பு கூகுளின் டிஸ்ப்ளே மற்றும் வீடியோ விளம்பர பிரிவின் உயர் துணைத் தலைவராக இருந்தார். வீடியோ விளம்பரம் யூடியூப்-ல் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது மறக்க முடியாது.

நீல் மோகன் - சூசன் வோஜ்சிக்கி

நீல் மோகன் - சூசன் வோஜ்சிக்கி

நீல் மோகன் நியமனத்தைச் சூசன் வோஜ்சிக்கி ஆதரித்த நிலையில், நீல் மோகன் முழுப் பொறுப்புகளை ஏற்று இயங்கும் வரையில் சூசன் யூடியூப்-ல் பணியாற்றுவார். இதைத் தொடர்ந்து கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் ஆலோசகராக இருப்பார்.

சுந்தர் பிச்சை - இந்தியர் சென்டிமென்ட்..?

சுந்தர் பிச்சை - இந்தியர் சென்டிமென்ட்..?

கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்தியரான சுந்தர் பிச்சை இருக்கும் வேளையில் முக்கியப் பிரிவான யூடியூப் சிஇஓ பதவியில் மீண்டும் ஒரு இந்தியரான நீல் மோகன்-ஐ நியமனம் மிகவும் முக்கியமானது. அடுத்த 5-10 வருடத்திற்கு இந்தியா மிகவும் முக்கிய வர்த்தக இலக்காகப் பார்க்கும் கூகுள்-க்கு நீல் மோகன் நியமனம் அவசியமாகியுள்ளது.

இந்தியா முக்கிய வர்த்தகச் சந்தை

இந்தியா முக்கிய வர்த்தகச் சந்தை

காரணம் இந்தியாவில் தற்போது சீன வீடியோ செயலிகள் இல்லாத நிலையில் ஒட்டுமொத்த சந்தையிலும் சிலரின் கையில் மட்டுமே உள்ளது, இதை எளிதாக யூடியூப் பிடித்துவிட்டால் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பெரிய ஆதிக்கம் செய்ய முடியும் என்பது கூகுள் திட்டம். இதற்கு நீல் மோகன் நியமனம் சரியானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+