யூடியூப் இன்று பலரின் வருமான ஆதாரமாக மாறியுள்ளது. பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டு சிலர் முழு நேர யூடியூபராக மாறி வருமானம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் வீட்டுக்கு ஒருவராவது யூடியூப் சேனல் வைத்திருக்கின்றனர். அப்படித்தான் இன்று காலை யூடியூப் வீடியோ பதிவிட மொபைலை எடுத்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா உட்பட பல நாடுகளில் யூடியூப் சேவை திடீரென முடங்கியது. இது தெரியாமல் நெட்வொர்க் சரி இல்லையா? என்று பலர் தங்கள் ஒய்ஃபை கனெக்ஷனை சரிபார்த்துள்ளனர்.
அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்காணிக்கும் தளமான டவுன்டிடெக்டரின் தகவல்படி, இன்று யூடியூபில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு வீடியோவை கிளிக் செய்தவுடன் எந்த ரெஸ்பான்ஸும் இல்லாமல் லோடிங் மட்டுமே காண்பித்துள்ளது. சுமார் 39 சதவீத பயனாளர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு யூடியூப் அப்ளிகேஷன் திறக்கவே இல்லை. அப்படி திறந்தவர்களுக்கும் சட்டென க்ளோஸ் ஆகியுள்ளது. ஒரு சிலருக்கு வெறும் வெள்ளை நிற பேஜ் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது. 24 சதவீத பயனாளர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு "Something went wrong" மற்றும் "Server Error" போன்ற மெசேஜ் மட்டுமே காண்பித்துள்ளது.
வீடியோக்களைப் பார்ப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் வீடியோக்களைப் பதிவிடும் கிரியேட்டர்கள் யூடியூப் சேவை முடங்கியதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். யூடியூப் ஸ்டூடியோவில் எந்த வீடியோவும் அப்லோட் செய்ய முடியாமல் தவித்தனர். வழக்கம்போல ஒரு பிளாட்பார்ம் வேலை செய்யவில்லை என்றால் மக்கள் சோசியல் மீடியாக்களில் அது குறித்து பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அதேபோல ஒவ்வொருவரும் தங்களுக்கு மட்டும் தான் யூடியூப் வேலை செய்யவில்லையா? என்று கேட்கத் தொடங்கினர்.

இன்டர்நெட்டில் ஆங்காங்கே மீம்ஸ்களும் பகிரப்பட்டது. ஆனால் தற்போது வரையில் யூடியூப் ஏன் முடங்கியது? என்ற காரணத்தை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதே போல பிப்ரவரி மாதமும் யூடியூப் முடங்கியது, அப்போது யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் டிவி ஆகியவற்றில் வீடியோக்கள் ஓடவில்லை இதனால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் எழுந்தன.
இது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் பயனர்கள், தங்களுடைய அப்ளிகேஷனை ரீ-ஸ்டார்ட் செய்து கேச் மெமரியை கிளீன் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். எது எப்படியோ இந்த டிஜிட்டல் காலத்தில் சில மணி நேரம் யூடியூப் போன்ற தளங்கள் இல்லை என்றாலும், உலகமே ஸ்தம்பித்தது போல் ஆகிவிடுகிறது!.


Click it and Unblock the Notifications