யூடியூப் சேனல் தொடங்க போறீங்களா? ஒரு வீடியோவுக்கு யூடியூப் எவ்வளவு வருமானம் தரும்?

இன்றெல்லாம் கூடுதல் வருமானம் தரும் விஷயங்கள் குறித்து மக்கள் தேடிக் கொண்டே இருக்கின்றனர். விலைவாசி அந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒருவருடைய சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்துவது பெரும்பாடாக இருக்கிறது. இதன் காரணமாக தற்போது பலரும் யூடியூப் சேனல்களை தொடங்குகின்றனர். யூடியூபில் வெற்றி கண்டு சிலர் அதிக வருமானமும் பார்த்து வருகின்றனர். சிலருக்கு யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதற்கு எவ்வளவு வருமானம் வழங்கப்படும் என்ற விவரங்கள் குறித்து தெரியாமல் இருக்கிறது.

இது போன்ற நபர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. யூடியூபில் எவ்வளவு வியூஸ்களைப் பெற்றால் வருமானம் கிடைக்கும்?, எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.

 யூடியூப் சேனல் தொடங்க போறீங்களா? ஒரு வீடியோவுக்கு யூடியூப் எவ்வளவு வருமானம் தரும்?

இன்றைய சமூகத்தினர் அதிகளவில் யூடியூப் சேனல்களின் மூலம் சம்பாதிக்கின்றனர். யூடியூப் வருமானம் வரும் பார்வையாளர்களை பொறுத்தது. அதிக அளவுலான சப்ஸ்கிரைப்ர்களை வைத்திருந்து நீங்கள் போடும் வீடியோக்களை அதிகமான மக்கள் பார்த்தால் யூட்யூபிலிருந்து அதிகமான வருமானம் கிடைக்கும்.

முதல் முறையாக யூடியூப் சேனலை திறப்பவர்கள் நல்ல கண்டன்டுகளை வைத்து வீடியோ போடுவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால் முதன்முதலாக யூடியூப் சேனல் தொடங்குபவர்கள் 1000 சப்ஸ்கிரைபர்களை பெற வேண்டும். அதோடு 4000 மணி நேரத்திற்கு மேலாக உங்கள் வீடியோவுக்கு வியூஸ்கள் வந்திருக்க வேண்டும். இது ஒரு வீடியோவுக்கான நேரம் கிடையாது. நீங்கள் போடும் அனைத்து வீடியோவையும் சேர்த்து 4000 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் பார்த்திருக்க வேண்டும். இதை கடந்தால்தான் யூடியூப்-பில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.

நீங்கள் போடும் வீடியோக்களைப் பொறுத்து வருமானம் மாறுபடலாம். உதாரணமாக கேமிங் வீடியோக்களுக்கு ரூ.37.50 முதல் 300 ரூபாய் வரையிலும் வருமானம் கிடைக்கும். டெக் ரிவ்யூ வீடியோக்களுக்கு 75 ரூபாய் முதல் 375 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதாவது புதிதாக வெளிவரும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தி அவற்றுக்கு ரிவ்யூ கூறுவது தான் டெக் ரிவ்யூ மற்றும் ஃபேஷன் வீடியோக்களுக்கு ரூ.60 முதல் ரூ.262.50 ரூபாய் வரையிலும் வருமானம் கிடைக்கும்.

நகைச்சுவை வீடியோக்களுக்கு 30 ரூபாய் முதல் ரூ.187.50 வரையிலும், கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு ரூ.137.50 முதல் ரூ.225 வரையிலும். உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களுக்கு ரூ.52.50 முதல் ரூ.300 வரையிலும் வருமானம் கிடைக்கிறது.

மேலும் யூடியூப் வருமானம் டாலர்களில் கணக்கிடப்படுகிறது. எனவே டாலரின் மதிப்பு ஏறுவது மற்றும் இறங்குவதும் உங்கள் வருமானத்தை பாதிக்கலாம். உங்களிடம் 1000 சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் மாதத்திற்கு தோராயமாக ரூ.1000 முதல் ரூ.3000 வரை சம்பாதிக்கலாம். 10,000-த்திற்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் இருந்தால் மாதத்திற்கு ரூ.7500 முதல் ரூ.22,500 வரை வருமானம் பெறலாம். அதுவே 1 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் மாதத்திற்கு ரூ.75,000 முதல் ரூ.2,25,000 வரை சம்பாதிக்கலாம். அதுவே 10 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்கள் இருந்தால் மாதத்திற்கு ரூ.7.5 லட்சம் வரையிலும் வருமானம் பெறலாம்.

மேலே கூறப்பட்ட தொகை தோராயமானது மட்டுமே நீங்கள் போடும் வீடியோவுக்கு ஏற்ப உங்களுக்கு வருமானம் வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+