பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப யூடியூப் தளமானது புது புது அம்சங்களை சேர்த்து வருகிறது. யூடியூப் கண்டெண்ட் கிரியேட்டர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிடும் போது watch hours தேவை என்பதற்காக நீண்ட நேரம் பேசுவார்கள்.
முக்கியமான பாயிண்ட்டை தெரிந்து கொள்ள நாம் இறுதிவரை வீடியோவை பார்க்க வேண்டி இருக்கும் அல்லது 10 நொடிகள் என அடுத்தடுத்து ஸ்கிப் செய்ய வேண்டி இருக்கும். இனி அந்த பிரச்னை இருக்காது.

யூடியூப் தளமானது தன்னுடைய ப்ரீமியம் பயனாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஒரு அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. Jump ahead என அழைக்கப்படும் இந்த வசதியானது முதலில் பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா வியூவிங் ஆகிய அம்சங்களை பயன்படுத்தி இந்த புதிய வசதியானது கொண்டுவரப்பட இருக்கிறது. அதாவது ஒரு வீடியோவை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் அதன் கன்டென்ட் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்கு நேரடியாக நீங்கள் வீடியோவை கொண்டு சென்று பார்க்கலாம்.
கண்டெண்ட் கிரியேட்டரின் இன்ட்ரோ மற்றும் பிற கதைகளை நீங்கள் கேட்க வேண்டிய தேவையில்லை. மற்றவற்றை ஸ்கிப் செய்துவிட்டு நேரடியாக கண்டெண்டுக்கு சென்று விடலாம். பொதுவாக நாம் யூடியூபில் ஒரு வீடியோவை பார்க்கும் போது அதில் நமக்குத் தேவையான கன்டென்ட் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு நாம் 10 நொடிகளாக ஸ்கிப் செய்யும் வசதி உள்ளது.
தற்போது அதையே சற்று மாற்றி Jump ahead என்ற வசதி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஸ்கிரீனில் இரண்டு முறை டேப் செய்தீர்கள் என்றால் ஒரு பட்டன் அதில் தோன்றும் அதில் பொதுவாக இதற்கு முன் இந்த வீடியோவை பார்த்தவர்கள் எங்கெல்லாம் ஸ்கிப் செய்தார்கள் என்றும், நீங்களும் அதே போல ஸ்கிப் செய்து கொள்கிறீர்களா என்றும் Jump ahead என்ற பட்டனில் காட்டும். இந்த Jump ahead பட்டன் என்பது சில நொடிகளுக்கு மட்டுமே ஸ்கிரீனில் தோன்றி மறைந்து விடும் என யூடியூப் கூறியுள்ளது.
மார்ச் மாதத்தில் இதனை பரிசோதனை செய்த யூடியூப் தற்போது தன்னுடைய பிரீமியம் பயனாளர்களுக்கு இந்த வசதியை தந்துள்ளது . தற்போது ஆண்ட்ராய்டு தளத்தில் அமெரிக்காவில் இந்த வசதியானது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.பிரீமியம் உறுப்பினர்கள் ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்த வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களுடைய யூடியூப்பை ஓபன் செய்து செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்றால் அதில் ட்ரை எக்ஸ்பிரிமெண்ட் நியூ ஃபியூச்சர்ஸ் என்ற ஒரு பிரிவிருக்கும் அதில் இதனை எனேபில் செய்து கொள்ளலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications