யூடியூப், OTT கதையை முடிக்கும் இன்ஸ்டாகிராம்.. 2 நாடுகளில் டெஸ்டிங் ஆரம்பம்.. விரைவில் இந்தியாவில்!

உலகளவில் கிரியேட்டர் எக்னாமி மிகப்பெரியதாக வளர்ந்து வரும் வேளையில், ஏற்கனவே யூடியூப் தளத்தில் பிரபலமாக இருக்கும் கிரியேட்டர்களை ஓடிடி தளங்கள் இழுத்து வரும் வேளையில், யூடியூப் மற்றும் ஓடிடி தள வாடிக்கையாளர்களை மொத்தமாக ஈர்க்கும் வண்ணம் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் இதேவேளையில் தனது அடிப்படையே வலிமையாக்கும் பணிகளை வேகமாக ஏஐ உதவியுடன் செய்து வருகிறது.

யூடியூப், OTT கதையை முடிக்கும் இன்ஸ்டாகிராம்.. 2 நாடுகளில் டெஸ்டிங் ஆரம்பம்.. விரைவில் இந்தியாவில்!

தற்போது மெட்டா நிர்வாகம் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் தளங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் தினசரி பயன்பாட்டுத் தளமாக மாற்ற வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது.

மெட்டா குழுமத்தில் அதிக என்கேஜ்மென்ட் கொண்ட இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ்-க்கு போட்டியாக 90 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை அப்லோடு செய்வதற்கான சேவையை அறிமுகப்படுத்தும் சோதனையில் இறங்கியுள்ளது.

இதன் வாயிலாக ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்கும் பயனர்களை இனி நீண்ட நேர வீடியோக்களை பார்க்க வைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது. இப்புதிய சேவைக்கான சோதனையை தற்போது அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் சில முக்கிய கிரியேட்டர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனைக்குப் பின்பு இந்தியா என உலகின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளது.

இப்புதிய சேவை அறிமுகம் மூலம் பாட்காஸ்ட், ரியாலிட்டி ஷோக்கள், வெப் சீரியஸ், காமெடி வீடியோக்கள், vlog வீடியோக்களை இன்ஸ்டாகிராம்-ல் முழுமையாக அப்லோடு செய்ய முடியும்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 90 நிமிடங்கள் கொண்ட திரைப்படங்களை paywall மூலம் இயங்கும் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மாடல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.

இந்திய திரைப்படங்களை பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பகுதிகளாகவும் கொண்டு வரலாம். இத்தகைய சேவை மூலம் pay per view முறை பெரிய அளவில் பிரபலமாகும், இதோடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கூடுதலாக சம்பாதிக்க முடியும்.

90 நிமிட வீடியோ சேவை மூலம் ஒரே நேரத்தில் யூடியூப், OTT தளங்களின் அஸ்திவாரத்தை ஆடிப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக ஸ்மார்ட்போன்களைத் தாண்டி, பெரிய ஸ்கிரீன்களிலும் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்கும் வகையில் டிவிக்கான இன்ஸ்டாகிராம் சேவையை மெட்டா உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே கூகுள் விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் மெட்டா விளம்பர வருவாயில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த 90 நிமிட வீடியோ என்பது ஜாக்பாட் ஆக மாறக்கூடும்.

செப்டம்பர் காலாண்டில் கூகுள் சுமார் 83.4 பில்லியன் டாலர் அளவிலான விளம்பர வருவாய் பெறும் என கணிக்கப்பட்ட நிலையில் 82 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இதேவேளையில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தளத்தை நிர்வாகம் செய்யும் மெட்டா செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 63.1 பில்லியன் டாலர் அளவிலான விளம்பர வருவாயைப் பதிவு செய்துள்ளது.

கூகுளின் விளம்பர வருவாய் அளவை மெட்டா நெருங்கி வருவது மூலம் அதன் ஆதிக்கம் விரைவில் உடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+