கூகுளின் முக்கிய வர்த்தக பிரிவான யூடியூப், இந்தியாவில் தனது மிகவும் ஸ்பெஷலான ஷாப்பிங் அம்சத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் மைந்திராவுடன் இணைந்து யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டத்தின் மூலம் தகுதியான யூடியூப் கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களில் ஃப்ளிப்கார்ட் மற்றும் மைந்திரா ப்ராடெக்ட்கழளை டேக் செய்யலாம், மேலும் கிரியேட்டர்கள் உருவாக்கிய வீடியோவை பார்ப்பவர்கள் அந்த இணைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது கமிஷன் பெறலாம். இத்தகைய ஷாப்பிங் அஃபிலியேட் வர்த்தக முறை உலகளவில் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் தளமாக உள்ளது.

கடந்த மே மாதத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் கூகுள் சுமார் 350 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டுக்கு பின்பு கூகுள் நிர்வாகம் யூடியூப் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் மற்றும் மைந்திராவை இணைந்துள்ளது.
யூடியூப் தளத்தில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 பில்லியன் மணிநேரம் ஷாப்பிங் தொடர்பான கன்டென்ட்-ஐ உலகளாவிய வாடிக்கையாளர்கள் பார்த்துள்ளனர். இது கூகுள் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஷாப்பிங் அஃபிலியேட் திட்டம் கன்டென்ட் கிரியேட்டர்கள், பார்வையாளர்கள் மற்றும் பிராண்டுகள் என அனைத்தை தரப்பினரையும் இணைத்து டிஜிட்டல் வர்த்தக துறையை புதிய வழிகளில் இணைத்து அடித்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஷயமாக பார்க்கப்படுகிறது
யூடியூப் ஷாப்பிங் இணைப்புத் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருக்கும் யூடியூப்-ன் விளம்பர வருவாய், யூடியூப் பிரீமியம், சேனல் மெம்பர்ஷிப் மற்றும் ரசிகர்-இயக்கப்பட்ட அம்சங்கள் உள்ளிட்ட வருவாய் ஈட்டும் வழிகளுக்கு கூடுதலாக இணைந்துள்ளது. இது வீடியோ கிரியேட்டர்களின் வீடியோவுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவுகிறது.
யூடியூப்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், சிஇஓ-வுமான நீல் மோகன் கூறுகையில், யூடியூப் மூலம் இந்தியாவில் ரூ.16,000 கோடி பொருளாதார நடவடிக்கையை உருவாக்கி, 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என முக்கியமான புள்ளிவிபரத்தை தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications