சென்னை: உலகம் முழுவதுமே யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் பலருக்கும் வருமான வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கின்றன. கன்டன்ட் கிரியேட்டர்களாக தங்களுக்கு பிடித்த மற்றும் நிபுணத்துவம் பெற்ற துறைகள் குறித்து பலரும் ஒரு சேனலை உருவாக்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்து ஃபாலோவர்களை பெறுகின்றனர்.
யூடியூப் சேனல்கள்: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஃபாலோவர்களையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வீடியோ பார்வைகளையும் பெறக்கூடிய சேனல்களுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவை வருமானத்தை வழங்குகின்றன. இந்த நிலையில் வரும் 15ஆம் தேதியிலிருந்து யூடியூப் சேனல்களை நடத்தி வருபவர்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் கொண்டு வர இருக்கிறது.

ஜூலை 15 முதல் மாற்றம்: இதன்படி யூடியூப் தளத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கன்டன்ட்களைக் கொண்டு வீடியோக்களை பதிவிடுபவர்கள், வேறு ஒருவரின் கன்டன்ட்டை காப்பியடித்து வெளியிடக்கூடிய வீடியோக்கள், ஏஐ மூலம் உருவாக்கக்கூடிய வீடியோக்களுக்கு இனி வருமானம் கிடைக்கப் போவது கிடையாது. யூடியூப் நிறுவனம் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தாங்களாகவே முயற்சி எடுத்து கன்டன்ட் கிரியேட்டர்கள் உருவாக்கக்கூடிய வீடியோக்களுக்கு மட்டுமே இனி வருமானம் வழங்கப்படும் வகையில் தங்களுடைய அல்காரிதங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறதாம்.
அசல் படைப்புகளுக்கே வருமானம்: எனவே தாங்களாக முயற்சி செய்து புதிய படைப்புகளை உருவாக்கும் அசல் படைப்பாளிகளுக்கு மட்டுமே இனி வருவாய் வழங்கப்படும் என்றும் அவர்களின் வீடியோக்கள் மட்டுமே அதிக அளவில் விளம்பரப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே யூடியூப் சேனல் நடத்துபவர்கள் தங்கள் சொந்த குரலில் சொந்த முயற்சியில் உருவாக்கும் கன்டென்டுகளுக்கு தான் இனி வருமானம் பார்க்க முடியும்.
உண்மை தன்மை ஆய்வு செய்யப்படும்: யூடியூப் தளத்தில் குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்கள் மற்றும் கடந்த 12 மாதங்களில் 4000 பொது பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வையாளர்கள் கொண்டிருந்தால் மட்டுமே அந்த சேனலுக்கு வருமானம் வேண்டி முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு யூடியூப் குழுவினர் உங்களுடைய சேனலில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோக்களின் உண்மை தன்மையின் ஆய்வு செய்வார்கள். அந்த வீடியோக்களில் இருக்கும் தகவல்கள் உங்களுடைய சொந்த குரலில் உங்களுடைய சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். காப்பி அடிக்கப்பட்ட தகவல்கள், ஏற்கனவே பலமுறை பதிவேற்றப்பட்ட தகவல்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருந்தால் அதற்கு பணம் கிடைக்காது.

குறையும் வருமானம்: இந்தியாவில் ஏற்கனவே இந்தியாவில் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு வருமானம் கணிசமான அளவு குறைந்து வருவதாக கோ இன்ஃப்ளூயன்ஸ் என்ற நிறுவனம் புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கிறது. இந்தியாவில் 35இல் இருந்து 45 லட்சம் இன்ஃப்ளூயன்சர்கள் / கன்டன்ட் கிரியேட்டர்கள் இருக்கின்றனர். இவர்களில் 6 லட்சம் கன்டன்ட் கிரியேட்டர்கள் தான் வீடியோக்கள் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள்.
கிரியேட்டர் வகைகள்: பெரும்பாலான கன்டன்ட் கிரியேட்டர்களால் தங்களுடைய வருமானம் ஈட்ட முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலவரமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் 10,000 வரையிலான ஃபாலோவர்களை வைத்திருக்கக்கூடிய நபர்களை நானோ கிரியேட்டர்கள் என அழைக்கிறார்கள். 10,000 முதல் 1 லட்சம் வரை ஃபாலோவர்களை வைத்திருப்பவர்கள் மைக்ரோ கிரியேட்டர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
கடந்த ஓராண்டில் குறைப்பு: 1 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை ஃபாலோவர்களை வைத்திருப்பவர்கள் மேக்ரோ, 5 லட்சத்திற்கும் மேல் ஃபாலோவர்களை கொண்டிருப்பவர்கள் மெகா கன்டன்ட் கிரியேட்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் வழங்க கூடிய வருமானம் என்பது 2024 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் நிதியாண்டில் குறைந்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம்: 2024 ஆம் நிதியாண்டில் இன்ஸ்டாகிராம் தளம் நானோ கிரியேட்டர்களுக்கு 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை வருமானமாக தந்து வந்தது , அதனை தற்போது 300 முதல் 5 ஆயிரம் ரூபாய் என குறைத்திருக்கிறது. அதேபோல மைக்ரோ கிரியேட்டர்களுக்கு 3 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் வழங்கி வந்தது, அதனை 2500 லிருந்து 80 ஆயிரம் ரூபாய் என குறைத்திருக்கிறது.மேக்ரோ கிரியேட்டர்களுக்கு இன்ஸ்டாகிராம் 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வழங்கி வந்தது அதனை தற்போது 40 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் என குறைத்துள்ளது. மெகா கிரியேட்டர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வழங்கி வந்த இன்ஸ்டாகிராம் அதனை தற்போது 1.8 லட்சம் என குறைத்திருக்கிறது.
யூடியூப் : யூடியூப் தளம் 2024 ஆம் ஆண்டில் மைக்ரோ கிரியேட்டர்களுக்கு 5 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்ட வருமானத்தை 4 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் என குறைத்து இருக்கிறது. மெகா கிரியேட்டர்களுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வழங்கி வந்த யூடியூப் அதனை 2.8 லட்சம் என குறைத்திருக்கிறது . இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான மேக்ரோ கிரியேட்டர்களுக்கு இதனை முழு நேர வேலையாக எடுக்காமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
இந்த வருமானம் போதாது: அடிக்கடி இந்த தளங்கள் கொண்டு வரும் அல்காரித மாற்றங்கள், அதிக எண்ணிக்கையில் கிரியேட்டர்கள் போட்டியில் இருப்பது, ஒரே மாதிரியான கண்டெண்டுகள் போடப்படுவது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சுமார் 75 சதவீத இன்ஃப்ளூயன்சர்கள் தங்களின் முழு நேர வேலையில் கிடைக்கும் வருமானத்தில் மிக சொற்பமாகவே இந்த தளங்களில் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தான் யூடியூப் அல்காரித மாற்றம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இனி யூடியூபில் வருமானம் பார்க்க வேண்டும் என்றால் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications