இணைய மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், நம்முடைய பணத்தை எப்படியெல்லாம் திருடலாம் என மோசடியாளர் ரூம் போட்டு யோசிப்பது மட்டும் அல்லாமல் இண்டர்நெட் வாயிலாக தொழில்நுட்ப உதவியுடன் திருடவும் தயாராகியுள்ளனர்.
ஆனால் நாம் செய்யவேண்டியது சிறிது கவனமாக இருப்பது மட்டும் தான், ஆனா அதையும் செய்யாத பலர் பல ஆயிரங்களை தாண்டி தற்போது கோடிகளில் பணத்தை இழந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வருவது மட்டும் அல்லாமல் காவல் நிலையத்தில் பல புகார்கள் பதிவாகி வருகிறது. இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து காவல் துறை உட்பட பல அரசு அமைப்புகள் ஆன்லைன் பேமெண்ட் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையிலும் மும்பையை சேர்ந்த ஒருவர் 1.3 கோடி ரூபாயை இழந்துள்ளாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த ஒருவர் யூடியூப் வீடியோ-வை லைக் செய்தால் தினமும் 5000 முதல் 7000 ரூபாய் வருமானம் பெற முடியும் என நம்பவைத்து மோசடியாளர்கள் வலையில் சிக்க வைத்து சுமார் 1.3 கோடி ரூபாயை அபகரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு 47 வயதாகிறது, இவர் மார்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
முதலில் வாட்ஸ்அப்-ல் பார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் தினமும் 5000 முதல் 7000 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என்ற விளம்பரம் வந்துள்ளது. இந்த விளம்பரத்தை தொடர்ந்த அந்த மொபைல் எண்ணுக்கு சேட் செய்த போது யூடியூப் வீடியோ பார்த்து, லைப் செய்து ஸ்கிரீன்ஷாட் அனுப்பினால் பணம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக பதிவு கட்டணமாக 5000 ரூபாய் டெபாசிட் செய்ய அறிவுறுத்தியுள்ளனர், இதை தொடர்ந்து லைக் செய்ய வேண்டிய வீடியோ லிங்க்-ம் அனுப்பட்டு ஒரு சில நாட்களில் 10000 ரூபாயும் கொடுக்கப்பட்டு மோசடியாளர்கள் இவரை நம்ப வைத்துள்ளனர். இதை தொடர்ந்து டெலிகிராம் குரூப்-ல் சேர சொல்லி புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த மோசடியாளர்களின் பேச்சை கேட்டு சுமார் 25 வங்கி கணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்து ஏமார்ந்துள்ளார். தான் செய்ய டெபாசிட் தொகை, செய்த வேலைக்கு கொடுக்க வேண்டி தொகை என சுமார் 1.3 கோடி ரூபாயை ஏமாற்றப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளார். இதனால் வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமுகவலைத்தளத்தில் வரும் பார்ட் டைம் ஜாப் போன்றவற்றை நம்பாதீர்கள்.


Click it and Unblock the Notifications