இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இரு சக்கர வாகனம் முதல் கார், சரக்கு வாகனம் வரையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் புதிய நிறுவனங்கள் வர்த்தகத்தை பிடிக்கும் முன்னரே பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்து சந்தை வர்த்தகத்தை பிடிக்க முயல்கிறது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் புதிதாக களமிறங்கிய ஓலா எந்தொரு நிறுவனமும் அடைந்திடாத வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் மிகவும் குறுகிய காலத்திலேயே பெற்றுள்ளது ஓலா. இந்த வெற்றி ஒருப்பக்கம் இருந்தாலும் ஓலா வாகனங்கள் குறித்து பல்வேறு குறைபாடுகளை மக்கள் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் வேளையில் யூடியூபர் ஒருவர் ஓலா ஸ்கூட்டரை கடலில் தள்ளியுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல நிறுவனங்கள் இத்துறையில் ஏற்கனவே இருந்தாலும், ரீடைல் ஷோரூம்களே இல்லாமல் ஆன்லைன் புக்கிங் வாயிலாக பல லட்சம் வாகனங்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஓலா ஸ்கூட்டர் தீ பிடித்து எறிந்த சம்பவத்தை தொடர்ந்து பல மாற்றங்களை, மேம்பாடுகளை செய்துள்ளது. அடுத்தடுத்து புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்ய தயாராக இருக்கும் வேளையில் ஒரு யூடியூப் வீடியோ டிரெண்டாகியுள்ளது.
Aki D Hot Pistonz என்ற யூடியூப் சேனல் வைத்திருக்கும் ஒருவர் தனது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலுக்கு கொண்டு சென்று பைக் மூழ்கும் வரையில் கடலுக்குள் கொண்டு சென்றது மட்டும் அல்லாமல், கடலில் பைக்-ஐ கிழே போட்டு மீண்டும் இதை ஓட்டி காட்டி வீடியோ போட்டு உள்ளார். இந்த வீடியோ பெரிய அளவில் பகிரப்பட்ட நிலையில் ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் கண்களிலும் தென்பட்டுள்ளது.
பாவிஷ் அகர்வால் உடனே டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ஒரு அமிதாப் பச்சன் பாட்டின் வரியை பகிர்ந்துள்ளார். இந்த பாடல் வரியில் கடலில் முங்கிய பின்பு அடுத்தது என்ன ..? என்ற டிவீட் செய்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. லட்ச ரூபாய் போட்டு வாங்கிய வண்டியை நீங்கள் கடலில் போடுவீர்களா..?


Click it and Unblock the Notifications