மும்பை: இந்தியாவில் பைனான்சியல் இன்ஃப்ளுயன்சர்கள் (financial influencers) பங்குச்சந்தை சார்ந்த தகவல்களை பகிர்வதற்கு செபி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் சரண் ஹெக்டேவின் (Sharan Hegde) 1% கிளப் நிறுவனத்திற்கு பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் எனப்படும் ஆர் ஐ ஏ(registered Investment Advisor (RIA)) உரிமத்தை வழங்கியுள்ளது.
ஆர் ஐ ஏ உரிமம் பெறக்கூடிய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை சட்டப்பூர்வமாக வழங்க முடியும் .இந்தியாவில் முதன்முறையாக பைனான்சியல் இன்ஃப்ளுயன்சரால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் செபியின் உரிமம் பெற்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனமாக மாறி இருக்கிறது.

இதற்காக கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்களாக போராடினோம் என சரண் ஹெக்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் பங்கு முதலீடு குறித்து போலியான வாக்குறுதிகளை அளித்து கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. எனவே கடந்த ஓராண்டு காலமாகவே செபி இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நிதி சார்ந்த இன்ப்ளூயன்சர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இவ்வாறு பைனான்சியல் இன்ப்ளுயன்சர்களாக இருக்கக்கூடிய நபர்கள் செபியிடம் பதிவு செய்ய வேண்டும் என கூறுகிறது. அதேபோல பங்குச்சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது லைவ் டேட்டாவை வைத்து எந்த ஒரு தகவலையும் பகிரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சில தினங்களுக்கு முன்பு கூட செபி வெளியீடு செய்தது. இந்த நிலையில் 1% கிளப் நிறுவனம் ஆர் ஐ ஏ உரிமம் பெற்று இருக்கிறது.
தற்போது தங்களுடைய நிறுவனம் 45 பேரை கொண்டு செயல்படுவதாகவும் சுமார் 1000 பேருக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் சரண் ஹெக்டே தெரிவித்துள்ளார். தங்களுடைய நிறுவனம் 1000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை மேலாண்மை செய்து வருவதாகவும், கடந்த ஓராண்டு காலத்தில் இதனை நாங்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறோம் அதுமட்டுமின்றி இதனை நாங்கள் லாபகரமாக நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
தங்களுடைய நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக இருக்கிறது அதனை 2000 ஆக உயர்த்த வேண்டும் எனவும் ஒவ்வொருவரும் 200 முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கும் வகையில் உயர்த்த வேண்டும் என்பதுமே தங்களுடைய எண்ணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது முறையான நிதி ஆலோசகர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக கூறும் அவர் தற்போது இந்தியாவில் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை சேமிப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே நிதி ஆலோசகர்களை கொண்டு இருக்கின்றனர் என்கிறார்.
செபி வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது இந்தியாவில் 10 லட்சம் நிதி திட்டமிடல் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில் மட்டுமே நாம் இருக்கிறோம் எனவே இந்த துறையில் நல்ல வேலை வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications