இன்றைய இணைய உலகில், யூடியூப் ஒரு பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு சக்திவாய்ந்த வருவாய் ஈட்டும் கருவியாகவும் மாறியுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை, யூடியூப் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கண்டண்ட் கிரியேட்டர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால், இந்தத் தளத்தின் உரிமையாளரான கூகுள் ஆல்ஃபாபெட் நிறுவனம் இந்த வெற்றியிலிருந்து ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதோ அதற்கான கணக்கீடு.
யூடியூப்பின் வருவாய் ஈட்டும் வியூகம்: யூடியூப்பின் வணிக மாதிரி மிகவும் எளிமையானது. ஒரு வீடியோவில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் அது வருவாய் ஈட்டுகிறது. விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் பணம் செலுத்துகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பகுதியை யூடியூப், வீடியோவைப் பதிவேற்றும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது. இதன் காரணமாகவே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க முடிகிறது.

யூடியூப்பின் ஆண்டு மற்றும் தினசரி வருவாய்: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனம், ஒவ்வொரு காலாண்டிலும் தனது வருவாய் அறிக்கைகளை வெளியிடுகிறது. 2024 ஆம் ஆண்டின் அறிக்கைகளின்படி, யூடியூப் ஒரு வருடத்தில் விளம்பரங்கள் மூலம் மட்டும் சுமார் $31 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2.5 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்த வருமானத்தில் யூடியூப் பிரீமியம் மற்றும் யூடியூப் மியூசிக் மூலம் வரும் வருவாய் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக அறிக்கைகளின்படி, யூடியூப்பின் தினசரி வருமானம் சராசரியாக $50 மில்லியன் முதல் $70 மில்லியன் வரை இருக்கும். இது, இந்திய மதிப்பில் தினசரி ரூ.415 கோடி முதல் ₹580 கோடி வரையிலான ஒரு பெரிய தொகை ஆகும். இது, தனிநபர்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் இந்தத் தளம், அதன் உரிமையாளருக்கு தினசரி நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டித் தருகிறது என்பதைக் காட்டுகிறது.
கிரியேட்டர்களுக்கும், யூடியூப்பிற்கும் இடையிலான வருவாய் பங்கீடு: யூடியூப்பின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி, கண்டண்ட் கிரியேட்டர்களால் பகிரப்படுகிறது. வழக்கமாக, விளம்பர வருவாயில் சுமார் 55% படைப்பாளருக்குச் செல்கிறது, மீதமுள்ள 45% யூடியூப்பிற்குச் சொந்தமானது. இது, உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் யூடியூபை ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றி, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியா, யூடியூப்பிற்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இசை, கேமிங், வ்லாக்கிங், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் ஆயிரக்கணக்கான கண்டண்ட் கிரியேட்டர்கள் தினசரி புதிய வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர். யூடியூப் ஒரு பொழுதுபோக்கு மற்றும் கற்றல் தளமாக மட்டும் இல்லாமல், மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் தளமாகவும் மாறியுள்ளது. ஆனால் அதன் உண்மையான நிதி வெற்றி, ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் அதன் உரிமையாளரின் கைகளில் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications