யுவராஜ் சிங், மந்திரா பேடி-க்கு இப்படியொரு சைட் பிஸ்னஸ் இருக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகப் பிரபலங்கள் வீட்டின் முன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொள்வது வழக்கம், ஆனால் தற்போது அதே பிரபலங்களின் சொந்த வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இவ்வளவு பெரிய வாய்ப்பு என்றால் கட்டாயம் செலவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஒரு பிரபலமாகிவிட்டாலே பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் வழிகள் இருக்கிறதோ, அனைத்திலும் பணம் சம்பாதித்துவிடும் மனநிலை அனைவரிடத்திலும் உள்ளது.

காசு, பணம், துட்டு..

காசு, பணம், துட்டு..

இப்படியிருக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு இருக்கும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் தங்களது வீட்டை AirBnb-யில் அதிகப்படியான தொகைக்கு வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர்ஸ்டாராக இருந்த யுவராஜ் சிங் தனது கோவா வீட்டை ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கு விடுகிறார். யுவராஜ் சிங் கோவா-வில் casa Singh என்ற பெரிய வீட்டை வைத்துள்ளார், இந்த வீட்டில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 1,212 ரூபாய் மட்டுமே.

மந்திரா பேடி
 

மந்திரா பேடி

90 கிட்ஸ் பலருக்கு மந்திரா பேடி என்றால் பலருக்கு மன்மதன் படம் தான் நினைவிற்கு வரும். கிரிக்கெட் கம்மென்டரி மூலம் பிரபலமான மந்திரா பேடி திரைப்படம், வெப் சீரியஸ், டிவி சீரியல் எனப் பலவற்றில் நடித்துள்ளார். மும்பையில் மந்திரா பேடி-க்கு சொந்தமான ஆடம்பர வீடான Bougainvillea ஏர்பிஎன்பி-யில் ஒரு நாளுக்கு 50000 ரூபாய் கட்டணத்துடன் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த வீட்டில் 5 பெட்ரூம் உள்ளது.

அர்ஜூன் மத்தூர்

அர்ஜூன் மத்தூர்


பாலிவுட் நடிகரான Arjun Mathur கோவா-வில் உள்ள Tranquil Haven என்னும் வில்லாவில் ஸ்விமிங் பூல், செக்யூரிட்டி, சமைத்து தர ஆள், பார்க்கிங் எனச் சகல வசதிகளும் உள்ளது. இந்த வீட்டுக்கு ஒரு நாளுக்கு 7,746 ரூபாய்.

பாய்ச்சுங் பூட்டியா

பாய்ச்சுங் பூட்டியா

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவின் வீடு சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. சிக்கம்-கிற்குச் சுற்றுலா வருபவர்கள் கால்பந்து ரசிகராக இருந்தால் இது சூப்பரான இடமாக இருக்கும்.

பத்மநாப் சிங்

பத்மநாப் சிங்

நவீன காலத்து ராஜா என அழைக்கப்படும் பத்மநாப் சிங் ஜெய்ப்பூரின் அரச பரம்பரையில் 303வது வம்சாவளியினர். 23 வயதான பத்மநாப் சிங் மகாராஜா ஜெய்ப்பூரில் உள்ள தனது சிட்டி பேலஸில் ஒரு இரவுக்கு 5.69 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பிரிவை வாடகைக்கு அளித்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yuvraj Singh to Mandira Bedi celebrities rents out they homes in Airbnb

Yuvraj Singh to Mandira Bedi celebrities rents out their holiday homes in Airbnb and other portals
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X