சென்னை: இந்தியாவின் முக்கிய மற்றும் பிரபலமான ஒளிபரப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம், தனது பணியாளர்களை 15 சதவீதம் குறைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. நிறுவனத்தின் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட மிகவும் திறமையான மற்றும் கவனம் செலுத்தும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் கோயங்காவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முடிவானது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், நிர்வாக செலவுகளை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறப்படுகிறது. அதற்காக மொத்தமாக எத்தனை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது என்ற எண்ணிக்கையை ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் வெளியிடவில்லை.

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான புனித் கோயங்கா, ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பணியாளர்களை 15 சதவிகிதமாக குறைக்கத் தொடங்கியுள்ளார். எதிர்கால இலக்குகளை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் கூடிய அதிக கவனம் செலுத்தும் குழுவை உருவாக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணிநீக்கங்கள் மொத்தம் 3,437 நிரந்தர ஊழியர்களில் சுமார் 500 பணியாளர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20% தன்னார்வ ஊதியக் குறைப்பை எடுக்க கோயங்கா முடிவெடுத்த சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ZEE இன் நிர்வாக அதிகாரியான புனித் கோயங்கா, ஒரு எளிமையான நிறுவன கட்டமைப்பை உருவாக்குவது, வளர்ச்சிக்கு முக்கியமான செயல்திறன் என்றும் மற்றும் லாபத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்த உதவும் என்று கூறினார். இலக்குகளை திறம்பட தொடரவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் இந்த அணுகுமுறை உதவும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஜப்பான் சோனி கார்ப்பரேஷனின் இந்திய பிரிவுடன் 2024ம் ஆண்டு ஜனவரியில் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இணையும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான முதலே ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்தித்து கொண்டிருக்கிறது. ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸின் பங்கு விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து 44.55 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், பணி நீக்கம் குறித்து பேசிய ZEE இன் தலைவர் ஆர்.கோபாலன் குறிப்பிடுகையில், நிறுவனத்தை எளிமைப்படுத்தவும், சிறந்த கட்டமைப்பை உருவாக்கவும் எம்டி மற்றும் நிறுவனர்கள் எடுத்த நடவடிக்கைகளை மேனேஜ்மென்ட் ஒப்புக்கொண்டுள்ளது. நிறுவனம் பெரும் சவால்களை சந்தித்து வருவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
நிர்வாகத்தின் திட்டம் சிக்கனமாக இருப்பதை வலியுறுத்துகிறது, மேலும் இருக்கும் வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் உயர்தர கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தக் கொள்கைகளை ஆதரிக்கிறது. குழுப்பணி மற்றும் செயல்திறன் மதிப்பிடப்படும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ZEE நிறுவனம் முக்கியமான தொழில்முனைவோர் உணர்வை ஆதரிக்கிறது, நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு குழு உறுப்பினரும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இணை உரிமையாளராகவும் செயல்படுவார்கள், என்று நிறுவனம் கூறியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications