ஜீ என்டர்டெயின்மென்டுக்கு என்ன ஆச்சு.. 2020ம் நிதியாண்டில் நிகரலாபம் 66.52% சரிவு..!

இன்றைய நாளில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான என்டர்டெயின்மென்ட் குழுமங்களில் ஒன்று ஜீ என்டர்டெயின்மென்ட். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தொலைக்காட்சி, இணைய பதிப்பகம், திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகின்றது.

என்டர்டெயின்மென்ட் ரீதியாக மிக பாப்புலரான நிறுவனமாக இருந்தாலும், வணிக ரீதியில் இந்த நிறுவனம் பின்னடைவை சந்தித்து வருகின்றது எனலாம்.

ஏனெனில் கடந்த நிதியாண்டில் இறுதி காலாண்டான மார்ச் காலாண்டில் 765.82 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளதாக சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

வருவாயும் வீழ்ச்சி

வருவாயும் வீழ்ச்சி

இது முந்தைய நிதியாண்டில் (2018 - 2019) இதே இறுதி காலாண்டான மார்ச் காலாண்டில் 292.53 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயானது 4.06 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,991.74 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

செயல்பாட்டு செலவினங்கள் அதிகரிப்பு

செயல்பாட்டு செலவினங்கள் அதிகரிப்பு

இந்த மார்ச் காலாண்டில் செயல்பாட்டுக் செலவினங்கள் 47.69% அதிகரித்து, 1,304.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 883.32 கோடி ரூபாயாக இருந்துள்ளது. திரைப்பட கடன், ZEE5ல் முதலீடு ஆகியவற்றால் 259.8 கோடி ரூபாய் செயல்பாட்டு கட்டணத்தில் அடங்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்த செலவு அதிகரிப்பு

மொத்த செலவு அதிகரிப்பு

அதே சமயம் விளம்பரம் மற்றும் சந்தாக்கள் வருவாயானது, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் காரணமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த செலவினங்கள் 66.05% அதிகரித்து, கடந்த மார்ச் காலாண்டில் 2,677.77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,612.60 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

ஆனால் அதே நேரம் இந்த காலகட்டத்தில் விளம்பரத்தின் வருவாய் 14.66% குறைந்து, 1,038 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,217.49 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் சந்தா மூலம் கிடைத்த வருவயானது, 31.15% அதிகரித்து 741.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 565.27 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு லாபம் வீழ்ச்சி

ஆண்டு லாபம் வீழ்ச்சி

இதே கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் லாபம், 66.52% குறைந்து. 524.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,567.24 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே வருவாய் 8,413.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 8,185.35 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+