ஜீ மீடியா கார்ப்பரேஷன் லிமிடெட் நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபய் ஓஜா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் திங்கள் கிழமை (மே 6, 2024) பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது ஜீ மீடியா நிர்வாகம்.
மே 4, 2024 முதல் அபய் ஓஜா-வின் பணிநீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஜீ மீடியா நிர்வாகம்.

"பணிநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அபய் ஓஜா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இனிமேல் செயல்பட மாட்டார்," என்று பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஜீ நிர்வாகம் விளக்கம் கொடுக்கப்பட்டது உள்ளது. ஆனால் அபய் ஓஜா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அபய் ஓஜா கடந்த ஆண்டு தான் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். இதற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு ஜீ மீடியாவில் சேர்ந்த அவர், WION மற்றும் ஜீ பிஸ்னஸ் தவிர்த்து, லினியர் சேனல்களின் முதன்மை வணிக அதிகாரி மற்றும் லாபம்-நஷ்டக் கணக்கு (P&L) தலைவராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
அபய் ஓஜா முன்னர் கடந்த மாத தொடக்கத்தில், ஜீ மீடியாவின் சட்டத் துறை தலைமை மேலாளர் பியூஷ் சௌத்ரி ஏப்ரல் 30, 2024ம் தேதி பதவி விலக உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உடனான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய செயல்பாடுகளை இணைக்கும் திட்டத்தை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் ஜீ குழுமத்தின் 2 வருட முயற்சிகள் வீண் ஆனது.


Click it and Unblock the Notifications