ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைப்புக்கு பல எதிர்ப்புகளை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களும், முதலீட்டாளர்களும் முன்வைத்தை நிலையில் NCLT எனப்படும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனைத்து எதிர் வாதங்களையும் தள்ளுபடி செய்து, இணைப்பிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.
NCLT இதற்கு முன்பு ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு குறித்த தீர்ப்பை ஜூலை 10 ஆம் தேதி திருப்பபெற்றது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி எச் வி சுப்பா ராவ் மற்றும் மது சின்ஹா ஆகியோர் அடங்கிய மும்பை NCLT பெஞ்ச், ஆக்சிஸ் ஃபைனான்ஸ், ஜேசி ஃப்ளவர் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கோ, ஐடிபிஐ வங்கி, ஐமேக்ஸ் கார்ப் மற்றும் ஐடிபிஐ டிரஸ்டிஷிப் போன்ற கடன் வழங்கியவர்களின் வாதங்களை கேட்டு அனைத்தையும் தள்ளுபடி செய்து முன்பு அளித்த தீர்ப்பை மீண்டும் அறிவித்தனர்.

இதன் மூலம் வியழக்கிழமை வர்த்தக முடிவில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் 15 சதவீதம் வரையில் உயர்ந்தாலும் இன்று, சில ரீடைல் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க துவங்கியதால் 2.33 சதவீதம் சரிந்து 278.90 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும்..? NCLT திர்ப்பு வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு பின் நிறுவன பதிவுகள் (ROC) முறையாக அறிவிக்கும். இதை தொடர்ந்து ஜீ என்டர்டெயின்மென்ட் 6 வாரங்களுக்கு பங்குசந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டு, இணைக்கப்பட்ட நிறுவனம் அதன் பின்பு பட்டியலிடப்படும்.
மேலும் ஜீ என்டர்டெயின்மென்ட் தலைவர் கோங்கா தொடர்பான வழக்கில் செபி ஆகஸ்ட் 14 ஆம் தேதி சாதகமாக தீர்ப்பு அளித்தால் தொடர்ந்து நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வாக தொடர்வார். கோங்கா மீதான வழக்கின் விபரம் இந்த இணைப்பில் உள்ளது. கிளிக் செய்து முழு விபரத்தையும் பெறவும்.

ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைக்கப்பட்ட நிறுவனத்தில் சோனி 50.86 சதவீத பங்குகளையும், ஜீ நிறுவனர்கள் 3.99 சதவீத பங்குகளை பெற உள்ளனர். பொது சந்தை முதலீட்டாளர்கள் 45.15 சதவீத பங்குகள் இருக்கும்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் 2வது பெரிய மீடியா நிறுவனமாக ஜீ என்டர்டெயின்மென்ட் உயரும், இதன் மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வயாகாம்18-க்கு பெரும் பிரச்சனையாக மாறும். ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர் வாயிலாக முகேஷ் அம்பானி கைப்பற்ற முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications