சோனி குரூப் கார்ப் வெள்ளிக்கிழமை நிர்வாகக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, இந்தக் கூட்டத்தில் Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் உடனான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய செயல்பாடுகளை இணைக்கும் திட்டம் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து, அடுத்த வார தொடக்கத்தில் சோனி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ பங்குச் சந்தையில், தனது முடிவு குறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப பொழுதுபோக்கு துறையும் மிகப்பெரியது, இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Zee - சோனி இணைப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணத்தால் இன்னும் இணைக்கப்பட உள்ளது
Zee - சோனி இணைப்பு குறித்துச் சோனி இரண்டு முக்கியக் கூட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளன. சோனியின் இந்திய நிறுவனமான Culver Max Entertainment வியாழக்கிழமை இரவு போர்டு மீட்டிங் நடத்த உள்ளது. அதைத் தொடர்ந்து Sony அதன் டோக்கியோ தலைமையகத்தில் நடைபெறும்.
இந்த நிலையில் Zee நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான புனித் கோயங்கா, சோனி நிறுவனத்தின் இணைப்புத் திட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது எனத் தீவிரமாக நம்புகிறார். இதே முடிவுடன் சோனி ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், ZEE-SONY இணைப்பில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த இணைப்புத் தோல்வியில் முடியலாம் என்றும், சோனி இந்தியா ஜனவரி 20 க்கு முன் இணைப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்தத் தகவல் அடிப்படையற்றது மற்றும் தவறானது என்று ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் அடுத்த நாளே பங்குச்சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் விளக்கம் கொடுத்து அறிவித்துள்ளது. சோனி நிறுவனம் - ஜீ என்டர்டெயின்மென்ட் மத்தியிலான இணைப்பில் உறுதியாக இருப்பதாகவும், தொடர்ந்து இதுகுறித்த பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், வெற்றிகரமான இணைப்புச் சாத்தியமாகும் எனவும் தனது அறிக்கையில் ஜீ என்டர்டெயின்மென்ட் தனது விளக்கத்தில் தெரிவித்தது.
மேலும் ZEE-SONY இணைக்கப்பட்ட பின்பு புதிய கூட்டணி நிறுவனத்திற்குத் தங்கள் தரப்பில் உள்ள பிரதிநிதியைத் தான் நியமிக்க வேண்டும் என இரு தரப்பும் மல்லுக்கட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. சோனி என்பி சிங்-ஐயும், ஜீ என்டர்டெயின்மென்ட் தரப்பில் புனித் கோங்கா முன்வைக்கப்படுகிறது. இதற்கான முடிவையும் சோனி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications